Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: துணி தொழிற்சாலையில் போலீசார் ரெய்டு-போலி டி-சர்ட்கள் பறிமுதல்

Posted by:
Published: Friday, September 21, 2012, 18:26 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: துணி தொழிற்சாலையில் போலீசார் ரெய்டு-போலி டி-சர்ட்கள் பறிமுதல்
 

கொழும்பு: ஐசிசி டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான போலி டி-சர்ட்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பிய தொழிற்சாலையில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு ஒருவரை கைது செய்த போலீசார், போலி டி-சர்ட்களை பறிமுதல் செய்தனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) சார்பாக டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் போட்டிகளை காண வரும் ரசிகர்களை கவரும் வகையில், 12 அணிகளின் சீருடையை போன்ற டி-சர்ட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான டுவென்டி20 உலக கோப்பை தொடர் தொடர்பாக துணி வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விற்பனை உரிமையை ஐசிசி, இலங்கையை சேர்ந்த சில நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் அருகே, ஐசிசியின் அனுமதி பெறாத போலி டி சர்ட்கள் உட்பட துணி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஐசிசி அதிகாரிகள், இலங்கை போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து இலங்கை போலீசார் நடத்திய விசாரணையில், டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 12 அணிகளின் டி சர்ட்கள் தயாரிக்கும் துணி தொழிற்சாலை குறித்து தெரியவந்தது.

இதையடுத்து அந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்த போலீசார், ஐசிசியின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட போலி துணி வகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் துணி தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனுரா சேனாநாயகே கூறியதாவது,

போலியான டி சர்ட்கள் தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். மேலும் ஆய்வு நடத்திய தொழிற்சாலை மற்றும் விற்பனை மையங்களில் இருந்த போலி துணி வகைகளை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்றார்.

இது குறித்து ஐசிசி சட்டத்துறை தலைமை அதிகாரி லென் ஹிக்கின்ஸ் கூறியதாவது,

ஐசிசி தனது வியாபார உரிமையை காப்பாற்ற மட்டும் இந்த புகாரை அளிக்கவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் மக்கள், ஏமாற்றம் அடைய கூடாது என்ற அக்கரை உடன் செயல்பட்டுள்ளது என்றார்.

English summary
Sri Lanka's police raided a factory turning out counterfeit ICC World Twenty20 T-shirts and seized stocks of spurious merchandise, a senior officer said.
கருத்தை எழுதுங்கள்