Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே 'அவுட்'

Posted by:
Published: Friday, September 21, 2012, 10:10 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே 'அவுட்'
 

ஹம்பாந்தோட்டை: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி, தொடரின் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறியது. தொடரில் 2 தோல்விகளை சந்தித்த ஜிம்பாப்வே லீக் போட்டிகளுடன் வெளியேறியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் 'சி' பிரிவை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வி அடைந்த ஜிம்பாப்வே நேற்று கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

போட்டியின் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே வீரர்கள், துவக்கம் முதலே ரன் சேர்க்க திணறினர். முதல் 5 ஓவர்களில் முதல் 3 விக்கெட்களை இழந்த ஜிம்பாப்வே அணிக்கு, மிடில் ஆடர் பேட்ஸ்மேன் கிரேக் எர்வின் 37 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். மற்றபடி மேட்சிகென்யரி 11 ரன்களை எடுத்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்த நிலையில் 94 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா விக்கெட் எதுவும் இழக்காமலேயே வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர்கள் ரிச்சர்ட் லெவி 50 ரன்களுடனும் (43 பந்து, 6 பவுண்டரி), ஹசிம் ஆம்லா 32 ரன்களுடனும் (33 பந்து, 3 பவுண்டரி) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் காலிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

சூப்பர்-8ல் தென் ஆப்பிரிக்கா:

சி பிரிவில் உள்ள ஜிம்பாப்வே அணி ஆடிய 2 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால், அடுத்த சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் அதே பிரிவில் உள்ள இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர்-8 சுற்றிற்குள் எளிதாக நுழைந்தது. இதனால் நாளை தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் இரு அணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. டுவென்டி20 போட்டிகளில் இதுவரை ஜிம்பாப்வே தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
South Africa crushed Zimbabwe by 10 wickets to reach the Super Eight stage of the ICC World Twenty20 2012 here on Thursday night. The defeat meant Zimbabwe crashed out without a win. Sri Lanka are the other team to join South Africa in Super Eight from Group C.
கருத்தை எழுதுங்கள்