Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மே.தீவுகள் அணியை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

Posted by:
Updated: Sunday, September 23, 2012, 18:19 [IST]
 

கொழும்பு: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது.

மே.தீவுகள் அணியை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

கொழும்பில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பி பிரிவு லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. மேற்கிந்திய தீவுகள் அணியில் ஸ்மித்தும் கிறிஸ் கெய்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் தடுமாறியது மேற்கிந்திய தீவுகள் அணி. 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் கெய்ல் 4 ரன்களில் அவுட் ஆகியிருக்க வேண்டும். ஆனால் ஷேன் வாட்சன் கேட்ச் பிடிக்காமல் போனதாக் கெய்லின் அதிரடி தொடர்ந்தது. 33 பந்துகளில் 54 ரன்களைக் குவித்துவிட்டார் கெய்ல். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை மேற்கிந்திய தீவுகள் எடுத்தது.

அதன் பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியைக் காட்டியது. ரன் ரேட்டானது 10க்குக் குறையாமல் பார்த்துக் கொண்டே வெளுத்துக் கட்டினர் ஆஸ்திரேலிய வீரர்கள். 9.1 ஓவர்களில் ஆஸ்திரேலியா 83 ரன்களை எடுத்த நேரத்தில் மழை திடீரென குறுக்கிட டக்வொர்த் லீவிஸ் முடிவு கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 17 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா சூப்பர்- 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Story first published:  Sunday, September 23, 2012, 10:38 [IST]
English summary
AUSTRALIA has qualified for the second round of the World Twenty20 following a remarkable rain-shortened run chase against the West Indies.
கருத்தை எழுதுங்கள்