Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

20 ஓவர் கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு- இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா

Posted by:
Published: Sunday, September 23, 2012, 10:08 [IST]
 

20 ஓவர் கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு- இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா
 

ஹம்பந்தோட்டா: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை வீழ்த்தியது. மழையினால் 20 ஓவர்களுக்குப் பதிலாக 7 ஓவர்கள் வீசப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

4-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஹம்பந்தோட்டாவில் நேற்று சி பிரிவு ஆட்டத்தில் இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் மோதின.

ஆனால் கனமழை காரணமாக வெகுநேரமாக ஆட்டம் தொடங்கப்படாமலேயே இருந்தது. அதன் பின்னர் 20 ஓவர்களுக்கு பதிலாக 7 ஓவர்கள் மட்டுமே வீசுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதேபோல் ஒரு அணியில் 2 பவுலர்கள்தான் அதிகபட்சமாக 2 ஓவர்கள் வீசலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 78 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 13 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தார். டுமினி 5 பந்துகளில் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன் பின்னர் ஆடிய இலங்கை அணியால் சமாளிக்க முடியவில்லை. 7 ஓவர்களில் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 46 ரன்களைத்தான் அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இலங்கையின் சங்ககராதான் அதிகபட்சமாக 13 ரன்களை எடுத்தார். தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் மோர்கல், காலிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

English summary
A clinical performance from South Africa saw them beat Sri Lanka by 32 runs in a rain-curtailed Group C match of the Twenty20 World Cup at Hambantota on Saturday.
கருத்தை எழுதுங்கள்