Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய பவுலிங்கின் சச்சின்.. ஜாகீருக்கு டோணி புகழாரம்!

Posted by:
Published: Sunday, September 23, 2012, 11:59 [IST]
 

இந்திய பவுலிங்கின் சச்சின்.. ஜாகீருக்கு டோணி புகழாரம்!
 

கொழும்பு: இந்திய பந்து வீச்சின் சச்சின் டெண்டுல்கராக ஜாகீர் கான் விளங்குகிறார் என்று கேப்டன் டோணி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து டோணி கூறுகையில், இந்தியப் பந்து வீச்சின் சச்சின் டெண்டுல்கர் என்று ஜாகீர் கானை அழைக்கலாம். அவரது பந்து வீச்சு தற்போது சரிவைச் சந்தித்திருக்கலாம். இருப்பினும் சச்சினைப் போன்ற திறமை படைத்தவர் ஜாகீர் கான். இந்தியப் பந்து வீச்சின் முதுகெலும்பாக அவர் திகழ்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது பந்து வீச்சில் சில மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றார் டோணி.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு நகரில் உலகக் கோப்பை டுவென்டி 20 லீக் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே சாம்பியனான இந்தியாவும், நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தும் மோதுவதால் இந்தப் போட்டி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Indian captain Mahendra Singh Dhoni today defended beleaguered speedster Zaheer Khan, calling him the "Sachin Tendulkar of Indian bowling" but at the same time indicated a few changes in the team line-up for the last World T20 group match against England here tomorrow. "It's easier to go after a bowler when he is not doing well. For me, Zaheer is the Sachin Tendulkar of the Indian bowling attack.
கருத்தை எழுதுங்கள்