Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிறிஸ்கெய்ல் கை கொடுப்பாரா?: வாழ்வா-சாவா? போட்டியில் இன்று மேற்கிந்திய தீவுகள்

Posted by:
Published: Monday, September 24, 2012, 18:14 [IST]
 

கிறிஸ்கெய்ல் கை கொடுப்பாரா?: வாழ்வா-சாவா? போட்டியில் இன்று மேற்கிந்திய தீவுகள்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் தோல்வியை தழுவியது. இதனால் சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேற இன்றைய லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கை கொடுக்கும் பட்சத்தில் இன்று அயர்லாந்தை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகள் சூப்பர்-8 சுற்றிற்குள் நுழைய முடியும்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் பி பிரிவை சேர்ந்த மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் தோல்வி அடைந்தது. அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற முடியும்.

மேற்கிந்திய தீவுகள்:

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியி்ல் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். அதேபோல இன்றைய போட்டியிலும் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்தை எளிதாக வீழ்த்திவிடலாம்

மேலும் சாமுவேல்ஸின் பொறுப்பான ஆட்டம் இன்று வெற்றிக்கு கை கொடுக்கலாம். மிடில் ஆடரில் ஆல் ரவுண்டர்களின் ஆட்டம், அணிக்கு பக்கபலமாக உள்ளது. பிராவோ, போல்லார்டு, கேப்டன் டேரன் சம்மி ஆகியோர் அதிரடியில் ஸ்கோர் உயர்கிறது.

பந்துவீச்சை பொறுத்த வரை சுனில் நரைனின் சுழல்பந்துவீச்சில் எதிரணியினர் திணறுகின்றனர். ஆனால் ரவி ராம்பால், எட்வர்ட்ஸ் ஆகியோர் விக்கெட்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அயர்லாந்து:

அயர்லாந்து கத்துக்குட்டி அணியாக களமிறங்கினாலும், சிறப்பான வீரர்களை கொண்டுள்ளது. ஓ பிரையன் சகோதரர்கள் மிடில் ஆர்டரில் ரன் குவிக்கும் தூண்களாக உள்ளது அணிக்கு பக்கபலம். அவர்களுடன் கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டு, பால் ஸ்டிர்லிங் ஆகியோர் ரன்களை குவித்தால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அதிக ஸ்கோரை எடுக்க முடியும்.

பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் அயர்லாந்து, கிறிஸ் கெய்ல் போன்ற அதிரடி வீரர்களை விரைவில் வெளியேற்றினால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு முன்னேறுவது எளிது.

இன்றைய போட்டியில் பங்கேற்க உள்ள இரு அணிகளில், வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றிற்கு முன்னேறும். இதனால் இன்றைய போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் உள்ளூர் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் ஆடியுள்ள கிறிஸ் கெய்லுக்கு, இலங்கையில் அதிக ரசிகர்கள் இருப்பதால், இன்றைய போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
This is a knockout contest on Monday night. West Indies and Ireland face off with one of teams staying back to enter Super Eight and the other going home from ICC World Twenty20 2012.
கருத்தை எழுதுங்கள்