Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சின் வீட்டிற்கு 'விசிட்' அடித்த லாரா-போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டார் சச்சின்

Posted by:
Published: Tuesday, September 25, 2012, 16:56 [IST]
 

சச்சின் வீட்டிற்கு 'விசிட்' அடித்த லாரா-போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டார் சச்சின்
 

மும்பை: மும்பையில் உள்ள சச்சினின் வீட்டிற்கு முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா வந்து சென்றுள்ளார். இருவரின் சந்திப்பின் போது எடுத்த போட்டோவை சச்சின், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்துள்ள இவர், மும்பை உள்ள பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஓய்வெடுத்து கொண்ட சச்சின், தனது வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா, சச்சினின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்ற இருவரும், சந்தித்த போது போட்டோ எடுத்துள்ளனர்.

இந்த போட்டோவை சச்சின், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் அருகே, எங்கள் வீட்டிற்கு யார் வந்திருக்கிறார் என்று பாருங்கள். இவர் சிறந்த கிரிக்கெட் வீரரும், எனது நண்பரும் ஆவார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சச்சினின் வீட்டிற்கு லாரா எப்போது வந்தார், எதற்காக வந்தார் போன்ற தகவல்கள் எதையும் சச்சின் வெளியிடவில்லை.

சமீபத்தில் சச்சின் ஓய்வு பெறுவது குறித்து கருத்து தெரிவித்த லாரா, சச்சின் ஒரு சிறந்த வீரர். அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும் என்று தெரிவித்திருந்தார்.

English summary
It was the perfect picture as two batting legends came together. Former West Indian captain Brian Lara visited Sachin Tendulkar at the latter's home in Mumbai.
கருத்தை எழுதுங்கள்