Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு மட்டும்தானா பியூஸ் சாவ்லா?

Posted by:
Published: Tuesday, September 25, 2012, 15:23 [IST]
 

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு மட்டும்தானா பியூஸ் சாவ்லா?
 

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணிக்காக குறைந்த போட்டிகளில் பங்கேற்றாலும், 4 உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ள ஒரு வீரர் உள்ளார். அவர் வேறு யாருமல்ல இந்திய சுழல்பந்துவீச்சாளரான பியூஸ் சாவ்லா தான். இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அது தான் உண்மை.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா. உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியா அணிக்காக மொத்தம் 4 உலக கோப்பை தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் கடந்த 2007ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பை மற்றும் கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை என்று மொத்தம் 2 உலக கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டுவென்டி20 போட்டியில் பியூஸ் சாவ்லா இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 2007ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது.

அதன்பிறகு இந்திய அணியில் காணாமல் போன பியூஸ் சாவ்லா, கடந்த 2010ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பைக்காக மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இத்தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே சாவ்லாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2010ம் ஆண்டு மே 2ம் தேதி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டுவென்டி20 போட்டியில் சாவ்லா அறிமுகமானார். அரையிறுதிக்கு கூட தகுதி பெறாத இந்திய அணி, 2010 டுவென்டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

அதன்பிறகு இந்திய அணியில் இருந்து மாயமான சாவ்லா, தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு(2011) ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், சாவ்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

இடையே ஒரிரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பியூஸ் சாவ்லா, எப்படி 2011 உலக கோப்பை தொடருக்கு வாய்ப்பு கிடைத்து என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் ஒரு சில போட்டிகளில் சாவ்லா ஆடினார். சாவ்லா கடைசியா கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி நெதர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றது.

ஆனால் வழக்கம் போல மீண்டும் இந்திய அணியில் இருந்து மாயமான சாவ்லா, தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் டுவென்டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியி்ல் இடம் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவிலான டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்காத சாவ்லா, எப்படி இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றார் என்பது ஒரு ஆச்சரியமான சம்பவமாகவே உள்ளது.

இதுவரை சர்வதேச அளவிலான 4 டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள சாவ்லா, மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 25 ஒருநாள் போட்டிகளில் சாவ்லா ஆடியுள்ளார்.

இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான அஸ்வின், பிரக்யன் ஓஜா ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கூட வாய்ப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் அதிகம் சோபிக்காத பியூஸ் சாவ்லா, உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இருப்பாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

உலக கோப்பை தொடர்களுக்கு மட்டும் பியூஸ் சாவ்லா, இந்திய அணியி்ல் தேர்வு செய்யப்படுவதன் பின்னணி என்ன என்பது மர்மமாகவே உள்ளது. இந்திய அணியில் சாவ்லாவை ராசிக்காக தேர்வு செய்கிறார்களோ? என்னமோ?

English summary
When one thinks of Piyush Chawla, the Indian leg spinner, you associate him with the word "surprise". His India selections have always raised eyebrows. While some call it a "surprise", many others define it as a "shock". Whether it is "surprise", "shock" or a mystery, nobody really knows. All this because of his presence in only World Cups, be it Twenty20 or 50-over global tournaments. There is no doubt that Chawla is a talented spinner. However, one has to question the selection committee's logic behind picking the Uttar Pradesh youngster only when there is a World Cup.
கருத்தை எழுதுங்கள்