Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: சூப்பர்-8 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு?

Posted by:
Published: Tuesday, September 25, 2012, 13:56 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: சூப்பர்-8 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு?
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக எதிர்பார்ப்பு கொண்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, சூப்பர்-8 சுற்றில் நடைபெற வாய்ப்புள்ளது. இன்று வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் தகுதி பெறும்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றின் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் டி பிரிவை சேர்ந்த பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. டி பிரிவில் உள்ள 3 அணிகளில் ஏற்கனவே நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறி உள்ளது.

ஏற்கனவே நியூசிலாந்தை வீழ்த்தியுள்ள பாகிஸ்தான் இன்றைய போட்டி தோல்வி அடைந்தால், வங்கதேசம் சமப்புள்ளிகள் பெறும். எனவே ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றிற்கான அணி தகுதி பெறும். டி பிரிவில் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறும் பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் அணி, வரும் 30ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க தகுதி பெறும்.

சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறியுள்ள இந்திய அணி மொத்தம் 3 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடனான போட்டிகள் முடிவாகி உள்ள நிலையில் இன்றைய போட்டியில் 3வது அணி யார் என்பது தெரியவரும். ஏற்கனவே பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை சந்தித்தால் பழித்தீர்க்க காத்திருக்கிறது.

ரன் ரேட் வாய்ப்பு எப்படி?:

இன்றைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால் மட்டும், சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறிவிட முடியாது. ரன் ரேட் வித்தியாசம் அதிகமாக இருக்க வேண்டும். தற்போதைய பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் கணக்கின்படி, வங்கதேசம் இன்றைய போட்டியில் 36 ரன்கள் அல்லது அதைவிட அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதில் குறைவான ரன்களில் வங்கதேசம் வெற்றி பெற்றால் கூட, பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றில் நுழைந்துவிடும்.

பாகிஸ்தானை பொறுத்த வரை சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்களை கொண்டுள்ளது. எனவே வங்கதேசத்தை இன்று எளிதாக வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால் வங்கதேசம் வீரர்கள் இன்று எழுச்சி பெறும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் முன்னேற வாய்ப்புள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

English summary
Team India having progressed to the Super Eights, are scheduled to play Australia, South Africa and the group winners of Group D in the Super Eights, might either play Bangladesh or Pakistan in the other Super Eights clash on Sep 30.
கருத்தை எழுதுங்கள்