Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வெற்றியை தடுத்தது மழை: ரன் ரேட் மூலம் சூப்பர்-8ல் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்

Posted by:
Published: Tuesday, September 25, 2012, 11:21 [IST]
 

வெற்றியை தடுத்தது மழை: ரன் ரேட் மூலம் சூப்பர்-8ல் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வீதம் அளிக்கப்பட்டது. இதில் ரன் ரேட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறியது. அயர்லாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் கேப்டன் போர்ட்டர்பீல்டு முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அதன்பிறகு பால் ஸ்டர்லீங், எட் ஜாய்ஸ் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.

இந்த நிலையில் 5வது ஓவரின் முடிவில் மழை பெய்ததது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. சுமார் 1 மணிநேரம் பெய்த மழைக்கு பிறகு, மீண்டும் போட்டி துவங்கியது. ஆனால் நேரமின்மை காரணமாக 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக அறிவிக்கப்பட்டது.

3 பவுண்டரிகள் அடித்து பொறுமையாக ஆடி வந்த எட்ஜாய்ஸ்(17) போல்டானார். ஸ்டர்லீங் 19 எடுத்து கிறிஸ் கெய்லிடம் கேட்ச் கொடுத்தார். அணியின் பரிதாப நிலையை பார்த்து அதிரடியாக ஆடிய வில்சன் 21 ரன்கள் எடுத்த கிறிஸ் கெய்லின் சுழலில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு நெய்ல் ஓ பிரையனையும்(25) கெய்ல் வெளியேற்றினார்.

ராம்பாலின் வேகத்தில் திணறிய கெவின் ஓ பிரையன் 13 ரன்களில் போல்டானார். கடைசி கட்டத்தில் ஜான்ஸ்டன்(15), ஜோன்ஸ்(14) ஜோடி அவுட்டாகாமல் ஆடினர். நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களின் முடிவில் அயர்லாந்து 6 விக்கெட்களை இழந்து 129 ரன்களை சேர்த்தது.

மேற்கிந்திய தீவுகள் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்யவே, போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வீதம் அளிக்கப்பட்டது. இதில் ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள்(-1.855) அதிகமாக இருந்ததால், சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேறியது. அயர்லாந்து அணி(-2.092) லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

English summary
Rain had the final say in West Indies-Ireland game and no result meant West Indies joined Australia in Super Eight from Group B in ICC World Twenty20 2012 here on Monday night at the R Premadasa Stadium. With both West Indies and Ireland tied with 1 point apiece, the former went through with a better net run rate. Both were in the negative. West Indies net run rate was -1.855 while Ireland's was -2.092. Australia topped the group with four points from two wins.
கருத்தை எழுதுங்கள்