Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: வீரர்களின் உடல்நலக்குறைவிற்கு குடிநீர் காரணமா?-ஐசிசி குழப்பம்

Posted by:
Published: Tuesday, September 25, 2012, 11:56 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை: வீரர்களின் உடல்நலக்குறைவிற்கு குடிநீர் காரணமா?-ஐசிசி குழப்பம்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பல அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு வயிற்று போக்கு, வாந்தி என்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு வீரர்களுக்கு அளிக்கப்படும் குடிநீரில் தான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குடிநீர் விநியோக நிறுவனத்தை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாற்றி உள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களில் பலரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, டிம் சவுத்தீ, ஆஸ்திரேலியாவின் பிராட் ஹோங், மிச்சில் ஸ்டார்க், அயர்லாந்தின் ஜார்ஜ் டோக்ரில், பால் ஸ்டீயர்லீங் ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கண்ட வீரர்களில், நியூசிலாந்தின் டிம் சவுத்தீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் மற்ற அணிகளில் உள்ள பல வீரர்களுக்கும் வயிற்று கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீரர்களின் உடல்நலக்குறைவிற்கு என்ன காரணம் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) விசாரித்து வருகிறது. இதில் வீரர்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் சிக்கல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தற்போது கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் குடிநீர் விநியோக நிறுவனத்தை, ஐசிசி மாற்றி உள்ளது.

இது குறித்து ஐசிசி செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது,

வீரர்களின் உடல்நலக்குறைவிற்கு குடிநீர் தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் உலக கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான குடிநீரை விநியோகிக்க புதிய நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு முழு அணியோ அல்லது தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான வீரர்களோ உடல்நலக்குறைவு அடைந்தால், உணவுப் பொருட்களில் குறைபாடு இருப்பதாக கருதலாம். ஆனால் சில வீரர்களுக்கு மட்டுமே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே உணவு விநியோகத்தில் எந்த குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.

ஆனால் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து எந்த அணியும், இதுவரை புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Following many cricketers suffering from stomach infection, ICC World T20 organisers have changed the water supplier and also arranged for food inspectors to find out if that was the main reason for spreading the gastro virus, according to official sources.
கருத்தை எழுதுங்கள்