Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பாகிஸ்தான் அணியில் வேகபந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை: முஹம்மது ஹபீஸ்

Posted by:
Published: Wednesday, September 26, 2012, 15:43 [IST]
 

பாகிஸ்தான் அணியில் வேகபந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை: முஹம்மது ஹபீஸ்
 

பாலிகலே: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் அணியை வீழ்த்திய பாகிஸ்தான், சூப்பர்-8 சுற்றிற்குள் நுழைந்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று அந்த அணியின் கேப்டன் முஹம்மது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான், சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று அந்த அணியின் கேப்டன் முஹம்மது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பந்துவீச முயன்றனர். ஆனால் வேகப்பந்துவீச்சில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சூப்பர்-8 சுற்று போட்டிகளில் களமிறங்கும் முன், வேகப்பந்துவீச்சில் உள்ள குறைகளை களைய வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் ஒருங்கிணைந்த செயல்பாடு வெற்றியை தந்துள்ளது. உலக கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். நசீர் சிறப்பாக ஆடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

துவக்க வீரர்களின் ஆட்டம் பாராட்டும் வகையில் இருந்தது. இதே உற்சாகத்துடன், அடுத்து வரும் போட்டிகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிகளை பெறுவோம். பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

English summary
Despite making the Super Eights of the ICC World Twenty20 with a clinical win over Bangladesh, Pakistan skipper Mohammad Hafeez conceded that there is still room for improvement in the pace bowling department.
கருத்தை எழுதுங்கள்