Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேவாக், ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோருக்கு ஊக்க மருந்து டெஸ்ட்!

Posted by:
Updated: Wednesday, September 26, 2012, 11:39 [IST]
 

ஷேவாக், ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோருக்கு ஊக்க மருந்து டெஸ்ட்!
 

கொழும்பு: உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் மூலம் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய வீரர்கள் ஷேவாக், அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையி்ல் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று நேற்றோடு முடிவடைந்து, சூப்பர்-8 சுற்று நாளை முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில் சூப்பர்-8 சுற்றிற்கு முன்னேறியுள்ள இந்திய அணி, வரும் 28ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோது உள்ளது.

இதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை சேர்ந்த வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் சார்பில், இந்திய வீரர்களான ஷேவாக், அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) அளித்த அனுமதியின் பேரில் ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. ஆனால் ஊக்க மருந்து சோதனையை கண்டு இந்திய வீரர் யுவராஜ் சிங் அதிருப்தி அடைந்தார். அப்போது அவர், எவ்வளவு முறை தான் நாங்கள் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவோம்? என்று கூறினார்.

Story first published:  Wednesday, September 26, 2012, 11:37 [IST]
English summary
Three Indian cricketers, Virender Sehwag, Harbhajan Singh and Ravichandran Ashwin, underwent routine dope test on Tuesday.
கருத்தை எழுதுங்கள்