Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேவாக் விரலில் காயம்: சூப்பர்-8 சுற்றில் பங்கேற்பதில் சிக்கல்?

Posted by:
Updated: Wednesday, September 26, 2012, 18:21 [IST]
 

ஷேவாக் விரலில் காயம்: சூப்பர்-8 சுற்றில் பங்கேற்பதில் சிக்கல்?
 

கொழும்பு: பயிற்சியின் போது விரலில் காயமடைந்த இந்திய துவக்க வீரர் ஷேவாக், சூப்பர்-8 சுற்றில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியில் ஷேவாக் இல்லாத நிலையில், துவக்க ஜோடியாக யாரை களமிறக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்தியா, சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இந்தியா மோத உள்ளது.

சூப்பர்-8 சுற்றில் வரும் 28ம் தேதி ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோத உள்ளன. இதற்காக நேற்று இரு அணி வீரர்களும், வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் வீரர்கள் சுமார் 3 மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய துவக்க வீரர் ஷேவாக் பயிற்சியில் ஈடுபடவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஓய்வெடுத்து கொண்ட ஷேவாக் பயிற்சியில் ஈடுபடாதது குறித்து கேட்ட போது, அவருக்கு விரலில் காயமடைந்துள்ளதாக தெரியவந்தது.

இங்கிலாந்திற்கு எதிரான லீக் போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட்ட போது, ஷேவாக் காயமடைந்ததாகவும், இதனால் அவர் அப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து காயம் பெரியதாகிவிட கூடாது என்பதால், நேற்று அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தெரியவந்தது. பயிற்சியில் ஈடுபடாமல் உள்ள ஷேவாக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஷேவாக்கிற்கு பதிலாக யார்?

காயம் காரணமாக சூப்பர்-8 சுற்று போட்டிகளில் ஷேவாக் ஓய்வெடுத்து கொண்டால், இந்திய அணியி்ல் யாரை துவக்க வீரராக களமிறக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய இர்பான் பதான், கம்பிர் ஜோடி மீண்டும் களமிறங்கலாம் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இர்பான் பதான் நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

அதேபோல சூப்பர்-8 சுற்றில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங்கிற்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அஸ்வின் தற்போது சிறப்பாக பந்துவீசி வருவதால், இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Story first published:  Wednesday, September 26, 2012, 10:35 [IST]
English summary
Senior opener Virender Sehwag's finger injury along with a suitable bowling combination are two major concerns for India ahead of their opening Super Eight Game against Australia in the ongoing ICC World Twenty20 in Sri Lanka.
கருத்தை எழுதுங்கள்