Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியின் வெற்றிகளில் சுழல்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும்: முரளிதரன்

Posted by:
Published: Wednesday, September 26, 2012, 18:10 [IST]
 

இந்திய அணியின் வெற்றிகளில் சுழல்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும்: முரளிதரன்
 

கொழும்பு: இந்திய அணியின் வெற்றிகளில் சுழல்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்று முன்னாள் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பங்கேற்ற இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்திற்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இளம்வீரர் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஹர்பஜன் சிங் 4 விக்கெட்களும், பியூஸ் சாவ்லா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி சுழல்பந்துவீச்சாளர்களின் உதவியுடன், உலக கோப்பை தொடரின் லீக் சுற்றை கடந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் சிறப்பாக பந்துவீ்சி வருவதாக முன்னாள் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் தற்போது சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இதனால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலையில் உள்ளது. இது இந்திய அணிக்கு கிடைத்துள்ள அதிஷ்ட வாய்ப்பாகும்.

இலங்கை ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பு அளிக்கும் தன்மை கொண்டவை. எனவே இந்திய அணியின் வெற்றிகளில் சுழல்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும். இலங்கை ஆடுகளங்களில் 40 சதவீதம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைக்கிறது.

இந்திய அணியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வருகிறார். மேலும் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கும், தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான லீக் போட்டியில் ஹர்பஜன் சிங்கின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.

என்னை பொறுத்தவரை ஹர்பஜன் சிங் எதையும் வித்தியாசமாக செய்யவில்லை. ஆனால் அவரிடம் இருந்த தன்னம்பிக்கை தான், வெற்றியை பெற்று தந்துள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதால், அவரது தன்னம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அது அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீச அவருக்கு உதவும்.

டுவென்டி20 போட்டிகளை பொறுத்த வரை, எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாது. ஆனால் சுழல்பந்துவீச்சு துறையில் பலம் கொண்ட துணை கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார்.

English summary
Sri Lanka’s spin legend Muttiah Muralitharan said that, All the bowlers are doing well for India. But especially spinners Ashwin and Harbhajan Singh are playing a big role in the team.
கருத்தை எழுதுங்கள்