Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து அமர்நாத் அதிரடி நீக்கம்!

Posted by:
Published: Thursday, September 27, 2012, 14:27 [IST]
 

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து அமர்நாத் அதிரடி நீக்கம்!
 

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மொஹிந்தர் அமர்நாத் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விக்ரம் ராத்தோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) 83வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்த மாதத்துடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இதில் 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் 4 பேருக்கு மட்டுமே பதவிக்காலம் முடிவடைகிறது. முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மொஹிந்தர் அமர்நாத், கடந்த ஆண்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கருத்து நிலவியது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் மொஹிந்தர் அமர்நாத்தை, தேர்வுக்குழுவில் இருந்து பிசிசிஐ விலக்கி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ரோஜர் பின்னி, தேர்வுக்குழுவின் தலைவராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற டோணி தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. இதனால் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, டோணியை இந்திய கேப்டனாக நியமிக்க கூடாது என்று அமர்நாத் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது கருத்தை, தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் ஏற்று கொள்ளவில்லை.

தேர்வுக்குழுவின் முடிவிற்கு அமர்நாத் எதிர்ப்பு தெரிவித்ததால், பிசிசிஐக்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்த இந்திய அணி கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Read more about: bcci, cricket, பிசிசிஐ
English summary
Former Indian batsman Mohinder Amarnath has been sacked as the North Zone selector by the BCCI during the board's 83rd Annual General Meeting (AGM) in Mumbai.
கருத்தை எழுதுங்கள்