Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை: மேற்கிந்திய தீவுகள்-தென்ஆப்பிரிக்கா வெற்றி துவக்கம்

Posted by:
Published: Thursday, September 27, 2012, 12:51 [IST]
 

பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை: மேற்கிந்திய தீவுகள்-தென்ஆப்பிரிக்கா வெற்றி துவக்கம்
 

காலே: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இலங்கையில் துவங்கியது. இதில் லீக் போட்டியில் பங்கேற்ற மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றன.

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று துவங்கியது. இதில் இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும், பி பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நேற்று லீக் சுற்றின் 2 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் ஆடின. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே சொதப்பலாக ஆடிய இலங்கை வீராங்கனைகள், 20 ஓவர்களின் முடிவில் 79 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். திலனி மனோதரா(24 ரன்கள்), செனவிரத்னா(14 ரன்கள்) ஆகிய இருவரும் மட்டுமே பொறுப்பாக ஆடினர். தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளின் சிறப்பான பீல்டிங் செய்தனர்.

80 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, திரிஷா செட்டி 33 ரன்கள் எடுத்து கை கொடுத்தார். இதன்மூலம் 17.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 80 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. போட்டியில் சிறப்பாக ஆடிய திரிஷா செட்டி ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் வெற்றி:

நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சுசி பேட்ஸ், அமி சட்டர்த்வைட் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனால் சுசி பேட்ஸ் 32 ரன்களில் அவுட்டானார்.

அதன்பிறகு வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 117 ரன்களை எடுத்தது.

118 ரன்களை சேஸ் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டியந்த்ரா டோட்டின் அதிரடியாக ஆடி உதவினார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். மேலும் ஸ்டாபையின் டெய்லர் 35 ரன்களை எடுத்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றி எளிதானது. 18 ஓவர்களின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்களை இழந்து 118 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இன்றைய 2வது லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
West Indies opened their account in the ICC Women's World Twenty20 2012 with a seven wicket win over a formidable New Zealand side in a Group B encounter in Galle. In another match South Africa achieved victory in 17.2 overs with six wickets to spare against Srilanka.
கருத்தை எழுதுங்கள்