Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கடவுள் கொடுத்த திறமையை பயன்படுத்த தெரியாதவர் ஷேவாக்: கிரேக் சாப்பல்

Posted by:
Published: Friday, September 28, 2012, 14:44 [IST]
 

கடவுள் கொடுத்த திறமையை பயன்படுத்த தெரியாதவர் ஷேவாக்: கிரேக் சாப்பல்
 

பெங்களூர்: இந்திய அணியின் துவக்க வீரர் ஷேவாக், கடவுள் கொடுத்த திறமையை தகுந்த முறையில் பயன்படுத்த தெரியாதவர் என்று முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷேவாக். ஆடுகளத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் திறன் படைத்தவர். ஆனால் சமீபகாலமாக பார்மின்றி தவித்து வருகிறார். இந்த நிலையில் கடவுள் கொடுத்துள்ள திறமையை ஷேவாக் தகுந்த முறையில் பயன்படுத்துவது இல்லை என்று முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கடந்த வாரம் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் ஷேவாக்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதை எண்ணி வருந்துகிறேன். இந்திய அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்ட போது, ஷேவாக்கை மிகவும் நேசித்தேன். ஆனால் அவர் ஒரு அன்பான மோசடி நபராக இருந்தார். இதனால் என்னால் அவருக்கு உதவ முடியவில்லை.

இந்திய அணியி்ல் உள்ள மற்ற எல்லா பேட்ஸ்மேன்களை காட்டிலும், ஷேவாக் சிறப்பாக ஆட திறமை கொண்டவர். ஆனால் நான் இந்திய பயிற்சியாளராக நான் இருந்த போது, ஷேவாக் மிகவும் வருத்தத்தை அளித்தார். அவருக்கு கடவுள் கொடுத்துள்ள திறமையை முறையாக பயன்படுத்த தெரியவில்லை.

இந்திய அணிக்கு தனது திறமையை அர்ப்பணித்து ஆட ஷேவாக்கிற்கு விருப்பம் இல்லை. கடும் முயற்சியின் மூலம் கிடைக்கும் வெற்றிகளை விட, தானாக கிடைக்கும் வெற்றிகளை தான் அவர் விரும்புவார். நான் பலமுறை அறிவுறுத்தியும், தன்னை மாற்றி கொள்ள அவர் விரும்பவில்லை.

மேலும் தனது உடல்தகுதியை குறித்து ஷேவாக் அதிக அக்கரை காட்டுவதில்லை. இதனால் அவ்வப்போது ஓய்வெடுத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேட்டிங் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளர் ஆவார். மேலும் சிலீப் பகுதியில் சிறந்த பீல்டராக செயல்பட கூடியவர். ஆனால் தனக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை ஷேவாக், சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்.

அணியின் பொறுப்புகளை சிறப்பாக எடுத்து செய்யும் போது தான் புகழ் கிடைக்கும். இதை அவர் உணர்ந்து செயல்பட்டால், எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக கூட மாறலாம். ஷேவாக்கை பொறுத்த வரை அவர் ஆடுகளத்தில் ஆட ஆரம்பித்தது முதல் அவுட்டாகும் வரை ரன்களை குவித்து கொண்டே இருப்பார். இந்த ஒரு சிறப்பான செயல்பாடு தான் அவரை இன்னும் அணியி்ல் அடையாளம் காட்டி வருகிறது என்றார்.

English summary
Former India coach Greg Chappell has revealed how he had to go through a frustrating time handling Virender Sehwag who he feels is in "danger of squandering his God-given talent."
கருத்தை எழுதுங்கள்