Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி: மழை வந்து கெடுத்துவிட்டது என்கிறார் டோணி

Posted by:
Updated: Saturday, September 29, 2012, 16:25 [IST]
 

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி: மழை வந்து கெடுத்துவிட்டது என்கிறார் டோணி
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய மழை தான் காரணம் என்கிறார் இந்திய கேப்டன் டோணி.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர்-8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி 14.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அணிக்கு எளிய வெற்றியை பெற்று தந்தனர்.

ஆஸ்திரேலிய அணியினர் பேட்டிங் துவங்கிய 3வது பந்திற்கு பிறகு போட்டியில் சில நிமிடங்கள் மழை குறுக்கிட்டது. இந்த நிலையில் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய மழை தான் காரணம் என்று இந்திய கேப்டன் டோணி குற்றச்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

போட்டியின் முக்கியமான கட்டத்தில் மழை வந்து கெடுத்துவிட்டது. அப்போது தான் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தது. சுழல்பந்துவீசசை பொறுத்தவரை ஈரமான பந்துகளை வைத்து பந்துவீசுவது கடினம். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட, அதே நிலை தான் நேற்றைய போட்டியிலும் ஏற்பட்டது. இதனால் நாங்கள் போட்டியில் தோல்வியை தழுவினோம்.

ஆனால் தோல்விக்கான காரணங்களை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. போட்டியில் சிறப்பான துவக்கத்தை பெற்ற இந்தியா, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் சிறப்பான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இன்னும் 20 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும்.

இந்தியா பேட்டிங் செய்த போது பந்து வந்தது போல, ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்த போது வரவி்ல்லை. பந்து ஈரமாக இருந்ததால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட எளிதாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். தோல்வியின் காயத்தை மறந்து, அடுத்த போட்டியில் சிறப்பாக ஆட முயற்சி செய்வோம் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியி்ல் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியுறும் பட்சத்தில், தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

Story first published:  Saturday, September 29, 2012, 16:19 [IST]
English summary
India captain MS Dhoni said rain was the main reason why their bowling came a cropper against Australia in the Super Eights of ICC World Twenty20 2012 on Friday night.
கருத்தை எழுதுங்கள்