Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

20 ஓவர் கிரிக்கெட்: மே.இந்திய தீவுகளை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

Posted by:
Published: Sunday, September 30, 2012, 11:49 [IST]
 

20 ஓவர் கிரிக்கெட்: மே.இந்திய தீவுகளை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி. டாஸை வென்ற கையோடு பேட்டிங் செய்ய களமிறங்கியது அந்த அணி. கெய்ல் மற்றும் சார்லஸ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பேரதிர்ச்சிக்குள்ளானது மேற்கிந்திய தீவுகள் அணி. கெய்ல் எடுத்தது வெறும் 2 ரன்கள்தான்!

பின்னர் களத்துக்கு வந்த சாமுவேல்ஸ், பிராவோ ஜோடி விக்கெட்டைப் பாதுகாத்ததே தவிர ரன்களை எடுத்தபாடில்லை. சாமுவேல்ஸ் மொத்தம் 50 ரன்களையும் பிராவோ 40 ரன்களையும் எடுத்தனர். பொல்லார்டு ஒரே ஒரு ரன் எடுத்து சொதப்ப மேற்கிந்திய தீவுகள் அணி மொத்தம் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கியது இலங்கை அணி. தொடக்கத்தில் தில்சான் தடுமாறி 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஜெயவர்த்தனேவும் சங்கக்காராவும் இலங்கை அணியை தூக்கி நிறுத்தினர். 15.2 வது ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது இலங்கை.

நேற்றைய போட்டியில் 49 பந்துகளில் 65 ரன்களைக் குவித்த ஜெயவர்த்தனே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

English summary
Mahela Jayawardene on Saturday struck a record-equalling sixth half-century in World T20 as Sri Lanka brightened their semifinal prospects with a crushing nine-wicket win over West Indies in their Super Eights match.
கருத்தை எழுதுங்கள்