Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இன்று பாகிஸ்தானை இந்தியா வென்றால்தான் செமி பைனலை நினைத்துப் பார்க்கலாம்!

Posted by:
Updated: Sunday, September 30, 2012, 12:05 [IST]
 

இன்று பாகிஸ்தானை இந்தியா வென்றால்தான் செமி பைனலை நினைத்துப் பார்க்கலாம்!
 

கொழும்பு: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது இந்தியா. இன்று நடைபெறும் ஹை வோல்டேஜ் போட்டியில் அது பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இதுதான் அவர்களுக்கு இறுதிப் போட்டி போல. காரண்ம், இதில் இந்தியா வென்றால்தான் அரை இறுதிப் போட்டி குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்பதால்.

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த கடந்த இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாமல் தோல்வியடைந்து தொடரை விட்டே வெளியேற்றப்பட்டது. இதே போன்ற நிலை இலங்கைத் தொடரிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

காரணம், முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மிக மோசமான முறையில் தோல்வியைச் சந்தித்தது இந்தியா. ரஞ்சி கோப்பை போட்டியை விட மோசமாக இப்போட்டியில் விளையாடியது இந்தியா. பந்து வீச்சு படு மோசம், பீல்டிங் ரொம்பக் கேவலமாக இருந்தது. பேட்டிங்கிலும் இந்தியர்கள் சொதப்பினர்.

ஐந்து பவுலர்கள் என்ற புதிய பார்முலாவுடன் ஆடிய இந்தியா அதற்கான பலனை மிகக் கடுமையாக அனுபவிக்க நேரிட்டது.

இந்த நிலையில் வலுவான நிலையில் உள்ள பாகிஸ்தானை இன்று சந்திக்கிறது இந்தியா. வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தி படு குஷியுடன் உள்ளது பாகிஸ்தான். எனவே இந்தியாவை அது பெருத்த நம்பிக்கையுடன் சந்திக்கும்.

2007ல் நடந்த ஜோஹன்னஸ்பர்க் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா இதுவரை பாகிஸ்தானை டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்புகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா வெல்வது கட்டாயமாகும். காரணம் முதல் போட்டியில் தோல்வியுற்று விட்டதால் இனி வரும் போட்டிகள் இந்தியாவுக்கு மிக மிக முக்கியமானது. ஆனால் பாகிஸ்தானை எப்படி இந்தியா சமாளிக்கப் போகிறது என்பதுதான் ரசிகர்களின் கவலையாக உள்ளது.

வார் அம் போட்டியில் இந்தியாவை, பாகிஸ்தான் வீழ்த்தியது. இதையே பெருத்த நம்பிக்கையாக சொல்லி வருகிறார்கள் பாகிஸ்தான் வீரர்கள். வார்ம் அப் போட்டி போலவே இதிலும் இந்தியாவை வெல்வோம் என்று பாகிஸ்தான் வீரர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். எனவே இன்றைய போட்டியில் வெல்ல அவர்கள் அதிக முனைப்பு காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் இந்தியாவின் உத்தியும் வெற்றியை இலக்காக கொண்டே தீர்மானிக்கப்படும் என்பதால் இந்தியா எப்படிப்பட்ட உத்தியுடன் இறங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷேவாக் இல்லாதது பெரும் குறையாக தெரிந்தது. எனவே இன்றைய போட்டியில் நிச்சயம் ஷேவாக் சேர்க்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் 6 மட்டையாளர்கள், 5 பந்து வீச்சாளர்கள் என்ற விபரீத பார்முலாவை தூக்கி குப்பையில் போட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

டோணி என்ன முடிவெடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இந்திய அணி: டோணி, கம்பீர், வீரேந்திர ஷேவாக், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், ஆர்.அஸ்வின், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், எல்.பாலாஜி, மனோஜ் திவாரி, பியூஷ் சாவ்லா, அசோக் திண்டா.

Story first published:  Sunday, September 30, 2012, 12:00 [IST]
English summary
Not for the first time in this competition, India find themselves in an unenviable position. Having crashed out of the tournament without a single win in the Super Eight stages of the last two editions in England and the West Indies, MS Dhoni and company began in a similar fashion, losing their Group 2 opening match to Australia here at the R Premadasa stadium on Friday. The defeat was as demoralising as it was morale-boosting against England only a few days ago in the first phase of the tournament.
கருத்தை எழுதுங்கள்