Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கிலாந்து

Posted by:
Published: Sunday, September 30, 2012, 12:39 [IST]
 

நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கிலாந்து
 

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது

இலங்கையில் நடைபெற்ற நியூசிலாந்து- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டெய்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்தின் குப்தில், நிகோல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே குப்தில் அவுட்டாகிப் போனார். அடுத்ததாக மெக்குல்லம் களம் இறங்கினார். அவரும்கூட ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார். ரைட்டிடம் கேச் கொடுத்து அவர் அவுட் ஆனார். ஆனாலும் நியூசிலாந்து வீரர்கள் ரன்களை எடுக்க முடியவில்லை. 6 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்து வென்றது.

English summary
England cruised home against New Zealand in a World Twenty20 Super Eight tie at the Pallekele International Cricket Stadium here Saturday.
கருத்தை எழுதுங்கள்