Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உலகக் கோப்பையில் பாக். 'பம்மாத்தை' தொடர்ந்து முறியடிக்கும் இந்தியா!

Posted by:
Updated: Tuesday, October 2, 2012, 13:01 [IST]
 

உலகக் கோப்பையில் பாக். 'பம்மாத்தை' தொடர்ந்து முறியடிக்கும் இந்தியா!
 

கொழும்பு: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிறைய வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் கூட உலகக் கோப்பைப் போட்டிகள் என்று வந்து விட்டால் பயந்து நடுங்கி அஞ்சி ஓடும்நிலைதான் உள்ளது. இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் இந்தியாவை ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றதில்லை. அந்தவகையில் தொடர்ந்து சரித்திரம் படைத்து வருகிறது இந்தியா.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் என்றால் பட்டாசுதான், அதிரடிதான், சரவெடிதான். அந்த அளவுக்கு ஆட்டத்தில் பொறி பறக்கும். இருப்பினும் உலகக் கோப்பைப் போட்டிகள் என்று வந்து விட்டால் எப்போதுமே இந்தியாவின் கை தான் ஓங்கும். அதை நேற்று கொழும்பில் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டனர் இந்தியர்கள்.

50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 5 முறை மோதியுள்ளன. ஐந்திலும் இந்தியாவுக்குத்தான் ஜெயம் கிடைத்தது. அதேபோல நேற்று நடந்த போட்டியையும் சேர்த்து டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3 முறை சந்தித்துள்ளன. மூன்றிலுமே பாகிஸ்தானுக்குத் தோல்விதான்.

ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா அதிரடியாகவே ஆடி பாகிஸ்தானை வென்றுள்ளது என்பது இந்திய ரசிகர்களுக்குக் களிப்பூட்டும் செய்தியாகும்.

இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவே தொடர்ந்து ராஜ நடை போட்டு வருகிறது என்ற சரித்திரம் தக்க வைக்கப்பட்டுள்ளது.

Story first published:  Monday, October 1, 2012, 8:18 [IST]
English summary
India have maintained their unbeaten record against Pakistan in World championships intact, having beaten them five times in the 50 over version and thrice in T2 WC matches.
கருத்தை எழுதுங்கள்