Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?-இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதல்

Posted by:
Published: Tuesday, October 2, 2012, 11:29 [IST]
 

உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?-இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதல்
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர்-8 சுற்று போட்டியில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.

டுவென்டி20 உல கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்-8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா, தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.

சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக ஆடி தோல்வியை அடைந்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற வேண்டியுள்ளது.

இந்திய அணி:

இந்திய அணியின் துவக்க வீரர்களான கம்பிர், ஷேவாக் ஜோடி, அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்து வருகிறது. ஆனால் கம்பிர் கடந்த 2 போட்டிகளில் அவசரப்பட்டு அவுட்டாகி வருகிறார். எனவே இன்றைய போட்டியில் அவர் பொறுமையாக ஆட வேண்டியுள்ளது.

மிடில் ஆடரில் விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். ஆனால் கேப்டன் டோணி அதிக பந்துகளை வீணடிப்பதால், அணியின் ரன் வேகம் குறைக்கிறது. மேலும் ரோஹித் சர்மா ரன் சேர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, படுதோல்வி அடைந்தது. எனவே இன்றைய போட்டியில் 4 பந்துவீச்சாளர்களுடன் டோணி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் ஜாகிர்கான், இர்பான் பதான் ஆகியோர் பொறுப்பாக பந்துவீசி வருகின்றனர். மேலும் சுழல்பந்துவீச்சு துறையில் அஸ்வினும், பகுதிநேர பந்துவீச்சாளர்களும் அசத்துகின்றனர். இன்றைய போட்டியில் தமிழக வீரர் பாலாஜிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா:

தென் ஆப்பிரிக்காவின் துவக்க வீரர்கள் லீவி, ஆம்லா ஆகியோர் ரன் சேர்க்க திணறி வருவது இந்தியாவிற்கு நல்ல செய்தி. மேலும் மிடில் ஆடரில் வரும் டுமினி ரன் எடுப்பதில் மந்தமாக செயல்படுகிறார். ஆனால் கேப்டன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடி வருகிறார். மேலும் கடைசி நேரத்தில் வரும் ராபின் பீட்டர்சன் அதிரடியாக ஆடி ரன்களை சேர்ப்பது, இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

பந்துவீச்சை பொறுத்த வரை மோனி மார்கல், ஸ்டைன் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மிரட்டுகின்றனர். மேலும் ஜோகன் போத்தா சுழல்பந்துவீச்சில் எதிரணியின் ரன் வேகத்தை குறைப்பதில் தேறியவர்.

சூப்பர்-8 சுற்றில் ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதிக்கு முன்னேற முடியும். மேலும் தென்ஆப்பிரிக்காவும் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்குகிறது. இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் போட்டி அதிக விறுவிறுப்பு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India brace up for another big day at ICC World Twenty20 2012. Tuesday will decide whether Dhoni and his men stay in Sri Lanka or pack their bags and head home.
கருத்தை எழுதுங்கள்