Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிறிஸ்கெய்லின் விருந்தினராக வந்த 3 பெண்களை கைது செய்த இலங்கை போலீசார்

Posted by:
Published: Wednesday, October 3, 2012, 18:45 [IST]
 

கிறிஸ்கெய்லின் விருந்தினராக வந்த 3 பெண்களை கைது செய்த இலங்கை போலீசார்
 

கொழும்பு: இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் அறைகளில் சுற்றி திரிந்த 3 இங்கிலாந்து பெண்களை, இலங்கை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று வரும் அனைத்து வீரர்களுக்கும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹோட்டல் அறைகளுக்கு சென்று வீரர்களை தொந்தரவு செய்ய கூடாது என்று பாதுகாப்பில் ஈடுபடுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், கொழும்புவில் உள்ள டீலக்ஸ் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இன்று காலையில் இலங்கை போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீரர்களின் அறையில் சுற்றி திரிந்த இங்கிலாந்தை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது,

சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படையினர் இன்று காலையில் வீரர்களின் அறையில் சுற்றி திரிந்த 3 பெண்களை கைது செய்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றனர்.

இது குறித்து ஹோட்டல் பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது,

ஹோட்டலில் கைது செய்யப்பட்ட பெண்கள், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ஆன்ரூ ரஸல், பிடில் எட்வார்டு, டவென் ஸ்மித் ஆகியோரின் விருந்தினர்களாக வந்தவர்கள். வீரர்கள் தங்கியுள்ள அறையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை.

கிரிக்கெட் வீரர்களோ, கைது செய்யப்பட்ட பெண்கள் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், போலீசாரின் இந்த அதிரடி கைது நடவடிக்கை வியப்பளிப்பதாக உள்ளது என்றனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியமோ, சர்வதேச கிரிக்கெட் வாரியமோ, இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

English summary
Sri Lankan police arrested three British women who were found socialising in the hotel rooms of West Indies players, including star batsman Chris Gayle, early Wednesday, police and hotel sources said.
கருத்தை எழுதுங்கள்