Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்சனையில் தீர்வு-இங்கிலாந்து அணிக்கு திரும்பினார் பீட்டர்சன்

Posted by:
Published: Thursday, October 4, 2012, 16:32 [IST]
 

கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்சனையில் தீர்வு-இங்கிலாந்து அணிக்கு திரும்பினார் பீட்டர்சன்
 

கொழும்பு: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை மீண்டும் இங்கிலாந்து அணியி்ல் சேர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன். அதிரடியாக ஆடும் திறன் கொண்ட இவர், இங்கிலாந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பீட்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இங்கிலாந்து கேப்டனாக இருந்த ஸ்டிராஸ் மற்றும் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் ஆகியோருக்கு எதிரான கருத்துகளை டுவிட்டர் இணையதளம் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பீட்டர்சன் அனுப்பினார்.

இதில் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து பீட்டர்சனை அதிரடியாக நீக்கியது. அதன்பிறகு இது குறித்து பீட்டர்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பீட்டர்சன் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.

இந் நிலையில் இங்கிலாந்து அணியில் இருந்து பீட்டர்சன் முழுமையாக நீக்கப்பட்டு, அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்ககை முடிவுக்கு வந்தது என்ற கருதப்பட்டது. இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த பீ்ட்டர்சன் வாய்ப்பு கிடைக்காமல், வர்ணனையாளராக பணியாற்றினார்.

ஆனால் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்து வெளியேறிய இங்கிலாந்து அணி, தற்போது போட்டிகளில் வெற்றி பெற திணறி வருகிறது. இதன் இடையே பீட்டர்சன், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையிலான பேச்சுவார்த்தையில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையின் முடிவில் பீட்டர்சனை மீண்டும் இங்கிலாந்து அணியி்ல் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பீட்டர்சன், கிரிக்கெட் வாரியம் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் இங்கிலாந்து அணி பங்கேற்க மீதமுள்ள தொடர்களில் பீட்டர்சனை அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கெவின் பீட்டர்சன் தனது தவறுக்கு, ஆன்ரூ ஸ்டிராஸிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரைவில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kevin Pietersen, who has been ignored by selectors in recent times, is all set to return to England team following an "agreement" reached between the England and Wales Cricket Board (ECB) and the player, ECB said in a media statement.
கருத்தை எழுதுங்கள்