Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொஞ்சம் கூட 'குஷியே' தராத சிங்களத்து 'சியர் லீடர்கள்'!

Posted by:
Published: Friday, October 5, 2012, 13:06 [IST]
 

கொஞ்சம் கூட 'குஷியே' தராத சிங்களத்து 'சியர் லீடர்கள்'!
 

கொழும்பு: 'சியர் லீடர்கள்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எல்லோருக்கும் 'துள்ளி'க் கொண்டு வரும் சந்தோஷம். ஆனால் இலங்கையில் தற்போது நடந்து வரும் டுவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக 'குவிக்கப்பட்டுள்ள' சியர் லீடர்களைப் பார்த்து அத்தனை பேரும் செம டென்ஷனாக இருக்கிறார்களாம்.

காரணம், சந்தோஷம், குஷி, துள்ளலை ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களிடம் கவர்ச்சி இல்லை என்பதே. மேலும் ஏதோ கபாடிப் போட்டியில் ஆடுபவர்கள் அணிவதைப் போன்ற பனியனைப் போட்டு இவர்களை டான்ஸ் ஆட விட்டுள்ளனர்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லீக் சுற்றில் இருந்து ஒவ்வொரு போட்டிகளிலும், ரசிகர்களை கவரும் வகையில் சியர் லீடர்கள் எனப்படும் உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது நடனம் ஆடும் அழகிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு அணியும் சிக்ஸர், போர் என்று அடிக்கும்போதும், விக்கெட் விழும்போதும் இவர்கள் டான்ஸ் ஆடிக் கலக்குவார்கள். ஐபிஎல் போட்டிகளின்போது வீரர்களை விட இந்த சியர் லீடர்களை கண்டு ரசிக்கவே பெரும் கூட்டம் கூடி ஆர்ப்பரித்தபடி இருக்கும். கொழுக் மொழுக் என கவர்ச்சிக் களேபரத்துடன் இந்த அழகிகள் அமர்க்களப்படுத்துவார்கள். ஆனால் இலங்கையில் தற்போது டான்ஸ் ஆடி வரும் உள்ளூர் சியர் லீடர்களைப் பார்த்தால் செம எரிச்சல்தான் வருகிறது என்று எல்லோரும் புலம்புகிறார்கள்.

ரசிகர்களிடம் இவர்களுக்கு சுத்தமாக ஆதரவே இல்லையாம். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் கூட இவர்களால் அப்செட் ஆகியுள்ளதாம்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெளிநாட்டு நடன அழகிகள் நடனம் ஆடுகின்றனர். ஆனால் இலங்கையில் நடைபெறும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் உள்ளூர் பெண்களே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இவர்கள் கவர்ச்சிகரமான டிரஸ் அணிய மறுத்து விட்டனராம். இதனால் முழுக்க மூடிய உடையுடன் டான்ஸ் ஆடி வருகிறார்கள். மேலும் இவர்கள் ரொம்பவே வெட்கப்படவும் செய்கின்றனர். இதனால்தான் ரசிகர்களிடையே இவர்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து சியர் லீடர்ஸ் அழகிகளின் மேலாளர் சுதேவ் அபய்சுகேரா கூறியதாவது,

என்னால் முடிந்த வரை சிறந்த டான்ஸர்களைத்தான் போட்டியின் இடையே ஆட ஏற்பாடு செய்துள்ளேன். இது போன்ற நடனத்திற்கு அழகான பெண்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதற்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்.

ஆனால் குறைவான சம்பளத்திற்கு தற்போது ஆடி வரும் அழகிகளை தான் ஏற்பாடு செய்ய முடியும். இப்பெண்கள் சிறப்பாக தான் ஆடுகிறார்கள். மேலும் அவர்கள் ஸ்டைலும் சிறப்பாக தான் உள்ளது. ஆனால் அழகிகள் அணிந்திருக்கும் உடையில் தான் பிரச்சனை. இவர்கள் அணிந்திருக்கும் உடையில், அவர்களுக்கு ஆடுவதற்கு அசவுகரியமாக உள்ளது.

இறுக்கமான உடை அவ்வப்போது கீழே இறங்குவதால், அதை சரி செய்வதில் தான் இப்பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குட்டை பாவாடைகளை அணிந்து நடனமாட இப்பெண்கள் தயாராக இல்லை. தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதை பார்த்து வருத்தம் அடைவார்கள் என்று கருதுகிறார்கள்.

மேலும் இது போன்ற பெரிய நடன நிகழ்ச்சிக்கு 3 முதல் 4 மாதங்கள் பயிற்சி தேவை. ஆனால் இப்பெண்களுக்கு வெறும் 8 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் உலக கோப்பை தொடர் ஏற்பாட்டாளர்கள் விரும்பும் வகையிலான நடனத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் நிஷாந்தா ரணதுங்கா கூறியதாவது,

சியர் லீடர்ஸ் குறித்துத் தெரிவிக்கப்படும் காரணங்கள் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம்(ஐசிசி) புகார் அளித்துள்ளோம். இந்த நடனம் தொடர்பாக அதிகளவில் எதிர்மறையான கருத்துகள் எங்களுக்கு வந்துள்ளன. அதை ஐசிசிக்கு அனுப்பி இருக்கிறோம். சியர் லீடர்ஸ் குரூப்பை தேர்வு செய்ததில் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றார்.

English summary
The man in charge of the cheerleaders at the World Twenty20 cricket tournament in Sri Lanka has admitted the girls are not as "beautiful" as he would have liked.
கருத்தை எழுதுங்கள்