Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது?- மனம் திறக்கிறார் சச்சின்

Posted by:
Published: Friday, October 5, 2012, 13:24 [IST]
 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது?- மனம் திறக்கிறார் சச்சின்
 

பெங்களூர்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்து அடுத்த மாதம் யோசிக்க போவதாக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தவர்.

இந்த நிலையில் சமீபகாலமாக சச்சினின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் சச்சின் தொடர்ந்து ஆட வேண்டும் என்று அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்து கேட்கும் போதெல்லாம், சச்சின் ஏதாவது ஒரு கருத்தை கூறி மழுப்பி வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில், தனக்கு இப்போதும் கிரிக்கெட் மீதான ஆசை குறையவில்லை. எனவே தன்னால் தொடர்ந்து ஆட முடியாது என்ற எண்ணம் வரும் போது ஓய்வை குறித்து யோசிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் 'டைம்ஸ் நவ்' என்ற செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அடுத்த மாதம் யோசிப்பேன் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் கூறியதாவது,

தற்போது நான் 39 வயதை கடந்துவிட்டேன். எனவே நான் ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பதில் தவறில்லை. இந்த நிலையில் எனது மனது என்ன சொல்கிறதோ, அதுபோல செய்ய விரும்புகிறேன். இப்போதைக்கு நான் நன்றாக இருப்பதாக என் மனம் கூறுகிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களை குறித்து நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

அடுத்த மாதம் நான் பங்கேற்க உள்ள போட்டிகளின் போது, ஓய்வு பெறுவதை குறித்து யோசிக்க உள்ளேன். 39 வயதை கடந்துவிட்ட நிலையில் இன்னும் என்னால் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தில் எனது உடல் மற்றும் மனதின் பலத்தை பொறுத்தே, ஓய்வு பெறுவது குறித்த முடிவு எடுக்க உள்ளேன்.

என்னிடம் இருந்து இந்திய அணி எதிர்பார்க்கும் ஆட்டத்தை என்னால் அளிக்க முடியவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டால் ஓய்வு முடிவை துரிதப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். எந்த கிரிக்கெட் வீரரும் இது போல தனது ஓய்வு முடிவை எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். எனது மனது கூறிய ஆலோசனையின்படி நான் செய்யாமல் இருந்திருந்தால், உலக கோப்பையை பெற்ற இந்திய அணியில் இடம்பெற 22 ஆண்டுகள் நான் காத்திருக்கமாட்டேன்.

அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு கிரிக்கெட் தொடர்களில் நான் ஆடுவேன். என்னால் சிறப்பாக ஆட முடியும் என்ற எண்ணம் இருக்கும் வரை எனது ஆட்டத்தை தொடருவேன். மேலும் என்னை குறித்து இந்திய அணி என்ன நினைக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

English summary
Sachin Tendulkar, for the first time has hinted at retirement, as the Master Blaster said he would take a call in the month of November.
கருத்தை எழுதுங்கள்