Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் நுழைந்தது இலங்கை!

Posted by:
Published: Friday, October 5, 2012, 9:50 [IST]
 

கொழும்பு: டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று பாகிஸ்தானை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சூப்பர்-8 சுற்று முடிந்து, நேற்று அரையிறுதி போட்டி துவங்கியது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. இலங்கை அணியில் தனன்ஜயா நீக்கப்பட்டு, ஹெராத் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக்கிற்கு பதிலாக சோகைல் தன்விருக்கு வாய்ப்பு தரப்பட்டது.

டுவென்டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் நுழைந்தது இலங்கை!

போட்டியின் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்க வீரர்களான ஜெயவர்த்தனேயும், தில்ஷனும் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில், 42 ரன்கள் எடுத்த ஜெயவர்த்தனே வெளியேறினார். சங்கக்காரா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். ஆனால் 18 ரன்கள் எடுத்த அவர் சோயப் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பந்துகளை வீணாடித்து பொறுமையாக ஆடி வந்த தில்ஷன் 35 ரன்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார்.

ஜீவன் மெண்டிஸ் 15 ரன்களில் ஏமாற்ற, கடைசி கட்டத்தில் மேத்யூஸ், பெரேரா ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. மேத்யூஸ்(10), பெரேரா (11) ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, கேப்டன் முஹம்மது ஹபீஸ், இம்ரான் நசீர் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். ஆனால் 20 ரன்கள் எடுத்த இம்ரான் நசீர் போல்டானார்.

அதன்பிறகு விக்கெட்கள் வரிசையாக சரிந்தன. ஜாம்ஷெட்டை(4), கம்ரான் அக்மல்(1), சோயப் மாலிக்(6) ஆகியோர் வந்த வேகத்தில் பிரிவிலியன் திரும்பினர். நீண்டநேரம் நிலைத்து ஆடிய கேப்டன் முஹம்மது ஹபீஸ் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த அப்ரிதி டக் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் வந்த தன்வீர் 8 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டன. குலசேகரா வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் மட்டுமே கிடைக்க, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போட்டியில் சிறப்பாக ஆடி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய ஜெயவர்த்தனே ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

English summary
It was a low scoring affair and Sri Lanka were brilliant to edge Pakistan out and book a berth in the final of ICC World Twenty20 2012 on Thursday night at the R Premadasa Stadium. Sri Lanka won by 16 runs after managing to score 139/4 in 20 overs on a difficult pitch. Pakistan finished on 123/7 in 20 overs.
கருத்தை எழுதுங்கள்