Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

20 ஓவர் போட்டிகளில் இலங்கையின் ஆட்டத்தால் மெய்சிலிர்த்தேன்..: கங்குலி

Posted by:
Published: Sunday, October 7, 2012, 11:35 [IST]
 

20 ஓவர் போட்டிகளில் இலங்கையின் ஆட்டத்தால் மெய்சிலிர்த்தேன்..: கங்குலி
 

கொழும்பு: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ள்டஹாவது:

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்றும் கூறுவது கடினம். மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ்கெய்ல் போன்ற அதிரடி வீரர் இருக்கும் போது நிச்சயமாக கணிக்க முடியாது. அவர் 20 ஓவர் போட்டியில் உலகின் சிறந்த வீரர் ஆவார். சொந்த மண் என்பதால் இலங்கைக்கு சாதகமாகவும் இருக்கலாம். இரண்டு அணிக்குமே சம வாய்ப்பிருக்கிறது. இன்றைய போட்டி நன்றாக இருக்கும். இலங்கையின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது. 2007-ம் ஆண்டில் இருந்து அந்த அணி 4 முறை உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்து உள்ளது. இதற்கு கேப்டன் ஜெயவர்த்தனே, முன்னாள் கேப்டன் சங்ககரா ஆகியோர் காரணம்.

Read more about: cricket
English summary
"It should be a good contest in the T20 World Cup final between two teams who have come through the tough grind of the group phase, super-8s and the semifinal" former captain Ganguly said.
கருத்தை எழுதுங்கள்