Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இறுதிப் போட்டி வரை வந்து வெளியேறுவது இலங்கைக்கு இது 4வது முறை!

Posted by:
Updated: Tuesday, October 9, 2012, 8:10 [IST]
 

இறுதிப் போட்டி வரை வந்து வெளியேறுவது இலங்கைக்கு இது 4வது முறை!
 

கொழும்பு: இறுதிப் போட்டி வரை வர வேண்டியது. அங்கு தோல்வியடைந்து வெளியேறுவது. இதுவே இலங்கை அணியின் பிழைப்பாகப் போய் விட்டது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன. லீக் சுற்றில் 4 அணிகள் வெளியேறின. அதன்பிறகு சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா உட்பட மேலும் 4 அணிகள் வெளியேறின.

அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான், இலங்கையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்த ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியி்ல் மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் மோதின. இலங்கை தனது சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சில் சுருண்ட இலங்கை, சொந்த மண்ணிலேயே உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இப்படி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவது இது இலங்கைக்கு நான்காவது முறையாகும். அதாவது டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகலில் இதுவரை 2 முறை அது இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியுற்றது. அதேபோல இந்தியாவிடம், ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அது தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்படி மொத்தம் 4 முறை இரு வகை உலகக் கோப்பைப் போட்டிகளிலும் அது தோல்வியடைந்துள்ளது.

கடந்து வந்த பாதை...

2009ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் மோசமான பேட்டிங் செய்த இலங்கை 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதை எளிதாக சேஸ் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் டுவென்டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இலங்கை அணி மீண்டும் இழந்தது.

நேற்று நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அது மேற்கு இந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்தது.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பை தொடரில் கோப்பையை பறிக்கொடுத்த இலங்கை அணியில், கேப்டனாக இருந்த சங்கக்காரா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெயவர்த்தனே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஜெயவர்த்தனே தலைமையிலான அணியும், உலக கோப்பையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Monday, October 8, 2012, 14:56 [IST]
English summary
Sri Lanka have won lost four successive World Cup finals. They were beaten in 2007 (50 over World Cup), 2009 (World T20), 2011 (50 overs) and 2012 world cup T20.
கருத்தை எழுதுங்கள்