Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வி: கேப்டன் பதவியை துறந்தார் ஜெயவர்த்தனே

Posted by:
Published: Monday, October 8, 2012, 16:13 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வி: கேப்டன் பதவியை துறந்தார் ஜெயவர்த்தனே
 

கொழும்பு: சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கை அணியினால் டுவென்டி20 உலக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. இதில் அதிருப்தி அடைந்த இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே, டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் சொந்த மண்ணில் சிறப்பாக ஆடிய இலங்கை அணி, நேற்று நடைபெற்ற இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறப்பான ஆட்டத்தில், இலங்கை அணி நேற்று தோல்வியை தழுவி உலக கோப்பையை இழந்தது.

இதில் அதிருப்தியடைந்த இலங்கை கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே, டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தபிறகு, வீரர்கள் தேர்வு குழுவினருடன், நான் கலந்து ஆலோசித்தேன். இதன் முடிவில் இலங்கை அணியின் டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன்.

நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதன் மூலம், இளம்வீரர் ஒருவர் அணியை வழி நடத்தும் வாய்ப்பை பெற முடியும். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக மட்டும் நான் தொடர முடிவு செய்துள்ளேன். வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் வரை இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.

தற்போது 35 வயதாகும் ஜெயவர்த்தனே திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து தற்போது விலகி உள்ள நிலையில், டுவென்டி20 போட்டிகளிலாவது தொடர்ந்து பங்கேற்க வாய்ப்புள்ளதா என்ற கேட்டதற்கு, அது குறித்து இலங்கை அணியின் புதிய டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் தீர்மானிப்பார் என்றார்.

English summary
Sri Lanka skipper Mahela Jayawardene decided to step down as captain of the national T20 team, following their 36 run defeat to West Indies in the World T20 final at R Premadasa Stadium.
கருத்தை எழுதுங்கள்