Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் தோல்வி: 2 இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Posted by:
Published: Tuesday, October 9, 2012, 12:44 [IST]
 

டுவென்டி20 உலக கோப்பை தொடரில் தோல்வி: 2 இலங்கை ரசிகர்கள் தற்கொலை
 

கொழும்பு: சொந்த மண்ணில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்ற தவறியது இலங்கை கிரிக்கெட் அணி. இதை கண்டு மனமுடைந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் 2 பேர் நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் மோதின. இதில் சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கை அணி, இறுதி போட்டி வரை முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்த இலங்கை உலக கோப்பையை இழந்தது.

இதனால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே, டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வியை கண்டு மனமுடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 17 வயதான அஷன் லக்ஷிதா என்பவர், இறுதி போட்டியை நகரில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பார்த்தார். இலங்கை அணி தோல்வி அடைந்ததை கண்டு சோகமாக வீடு திரும்பிய அவர், வீட்டின் அருகே இருந்த மாமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு இலங்கை கிரிக்கெட் ரசிகர் மகேந்திரன் சுரேஷ்(21). வீட்டில் இறுதி போட்டியை பார்த்த அவர், தோல்வியை கண்டு மனமுடைந்து படுக்கை அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

English summary
Two Sri Lankan youth unable to put up with the national team's defeat in the ICC World Twenty20 cricket final against the West Indies have committed suicide, police said.
கருத்தை எழுதுங்கள்