Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

2வது முறையாக ஆஸ்திரேலியா வசம் பெண்கள் டுவென்டி20 உலக கோப்பை!

Posted by:
Updated: Friday, October 26, 2012, 9:47 [IST]
 

2வது முறையாக ஆஸ்திரேலியா  வசம் பெண்கள் டுவென்டி20 உலக கோப்பை!
 

கொழும்பு: பெண்களுக்கான டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் கோப்பையை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து முடிந்தது. இதில் ஆண்களுக்கான உலக கோப்பையை, மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இந்த நிலையில் பெண்களுக்கான உலக கோப்பையை, ஆஸ்திரேலிய அணி 2வது முறையாக வென்றுள்ளது.

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடியது.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீராங்கனை மேக் லேன்னிங், அலேசா ஹூலி ஜோடி பொறுப்பாக ஆடினர். இதனால் 6.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 50 ரன் ஸ்கோரை எட்டியது. 24 பந்துகளில் லேன்னிங் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் குறைந்தது. 26 ரன்களை எடுத்த ஹூலி 11வது ஓவரில் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேமரூன், லிசா ஜோடி 51 ரன்களை சேர்ந்தது. கடைசி வரை அவுட்டாகாமல் ஆடிய லிசா 23 ரன்களை எடுத்தார். ஜெஸ் கேமரூன் 45 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 142 ரன்களை குவித்தது.

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீராங்கனை சார்லட் எட்வார்டு சிறப்பான துவக்கத்தை அளித்தார். சிறப்பாக ஆடிய சார்லட் 28 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு வந்த வீராங்கனை சொற்ப ரன்களில் வெளியேறினர்.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. தட்டு தட்டுமாறி ஆடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா மீண்டும் கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Tuesday, October 9, 2012, 13:20 [IST]
English summary
Australia women made it two titles in a row as they defeated England by four runs in a thrilling final to win the ICC Women's World Twenty20 2012 here at R Premadasa Stadium. Australia had won the trophy in 2010 in the Caribbean.
கருத்தை எழுதுங்கள்