Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் போட்டிகளிலிருந்தே அம்பயர்களின் மேட்ச் பிக்சிங் ஆட்டம் ஆரம்பித்தது.. டேரல் ஹேர்

Posted by:
Updated: Wednesday, October 10, 2012, 12:24 [IST]
 

ஐபிஎல் போட்டிகளிலிருந்தே அம்பயர்களின் மேட்ச் பிக்சிங் ஆட்டம் ஆரம்பித்தது.. டேரல் ஹேர்
 

டெல்லி: அம்பயர்கள் இடையிலான மேட்ச் பிக்சிங் பழக்கம், ஐபிஎல் தொடர் துவங்கியது முதலே இருந்து வருவதாக முன்னாள் ஆஸ்திரேலியா அம்பயர் டேரல் ஹேர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் பரபரப்பான போட்டிகளில் புரோக்கர்கள் மூலம் மேட்ச்-பிக்சிங் செய்த வீரர்கள் பலரும் சிக்கியுள்ளார். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்களுக்கு, போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் போட்டிகளுக்கு நடுவர்களாக நிறுத்தப்படும் அம்பயர்களே, மேட்ச் பிக்சிங் மோசடியில் ஈடுபட்டதாக வெளியான செய்தி தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்வது குறித்து இந்திய டிவி சேனல் நடத்திய ரகசிய பேரத்தில், பாகிஸ்தானை சேர்ந்த நதீம் கவுரி, அனீஸ் சித்திக், வங்கதேசத்தை சேர்ந்த நதிர் ஷா, இலங்கையை சேர்ந்த காமினி திசநாயக்கே, மவுரிஸ் வின்ஸ்டன், சகரா காலேக் ஆகிய 6 அம்பயர்கள் கலந்து கொண்டனர். அப்போது பணத்தை பெற்று கொண்டு எந்த அணிக்கு வேண்டுமானாலும் சாதகமான முறையில் தீர்ப்புகளை வழங்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம் கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு வழங்கும் அம்பயர்களின் மோசடிகளை டிவி சேனல் செய்தியாளர்கள் வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி), இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச கிரிக்கெட் வாரியங்களும் இது குறித்த விசாரணையை துவங்கி உள்ளன. ஆனால் புகாரில் சிக்கியுள்ள அம்பயர்கள் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் அம்பயர் டேரல் ஹேர், இந்த புகார் தொடர்பாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ஐபிஎல் தொடர் துவங்கிய போதே அம்பயர்களிடையே மேட்ச் பிக்சிங் பழக்கம் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஐபிஎல் தொடர் துவங்கிய காலத்தில் இருந்தே அம்பயர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு வருவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இது எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது தெரியவில்லை. மேட்ச் பிக்சிங் செய்வதற்கு வாய்ப்பு மற்றும் பேராசை என்ற இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒரு நபரின் பேராசையை தீர்த்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால், உறுதியாக அவர் இது போன்ற மோசடியில் ஈடுபடுவார்.

நான் அம்பயராக பணியாற்றிய காலத்தில் கூட இது போன்ற பேராசை கொண்ட நபர்கள் பலரும் இருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன். கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் ஊழல்களை ஐசிசி மூலம் முழுமையாக நீக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நான் தற்போது உள்ளூர் போட்டிகளுக்கான அணிக்காக பணியாற்றி வருகிறேன். அப்போது ஐபிஎல் தொடரில் நடைபெறும் சம்பவங்களை குறித்து, ஆஸ்திரேலியா பயிற்சியாளர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.

ஐசிசிக்கு சட்டரீதியிலான அதிகாரம் இல்லை. எனவே கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் இது போன்ற மோசடிகளை முழுமையாக நீக்குவது கடினம் என்றார்.

டேரல் ஹேர், சச்சின் டெண்டுல்கருக்கும், இந்திய அணிக்கும் எதிராக பல சர்ச்சையான தீர்ப்புகளை அளித்தவர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published:  Wednesday, October 10, 2012, 12:23 [IST]
English summary
Former umpire Darrell Hair is not at all surprised by the allegations of fixing against match officials, and said such rumours started doing rounds since the birth of the cash-rich Indian Premier League.
கருத்தை எழுதுங்கள்