Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மேட்ச் பிக்சிங் விசாரணை முடியும் வரை 6 அம்பயர்கள் சஸ்பெண்ட்: ஐசிசி அதிரடி

Posted by:
Published: Wednesday, October 10, 2012, 14:40 [IST]
 

மேட்ச் பிக்சிங் விசாரணை முடியும் வரை 6 அம்பயர்கள் சஸ்பெண்ட்: ஐசிசி அதிரடி
 

துபாய்: மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கியுள்ள 6 அம்பயர்களின் மீதான விசாரணை முடியும் வரை, அவர்களை சஸ்பெண்ட் செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் சர்ச்சைகளில் வீரர்கள் தான் சிக்கி வந்தார்கள். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்வது குறித்து இந்தியா டிவி சேனல் ரகசிய பேரம் ஒன்று நடத்தியது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த நதீம் கவுரி, அனீஸ் சித்திக், வங்கதேசத்தை சேர்ந்த நதிர் ஷா, இலங்கையை சேர்ந்த காமினி திசநாயக்கே, மவுரிஸ் வின்ஸ்டன், சகரா காலேக் ஆகிய 6 அம்பயர்கள் கலந்து கொண்டனர். அப்போது பணத்தை பெற்று கொண்டு எந்த அணிக்கு வேண்டுமானாலும் சாதகமான முறையில் தீர்ப்புகளை வழங்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம் கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு வழங்கும் அம்பயர்களின் மோசடிகளை டிவி சேனல் செய்தியாளர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்னாள் வீரர்களும், அம்பயர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஐசிசி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் குற்றச்சாட்டப்பட்டுள்ள 6 அம்பயர்களின் மீதான விசாரணை முடியும் வரை அவர்களை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஐசிசி உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அம்பயர்களின் மீதான குற்றச்சாட்டு எழுந்த 48 மணிநேரத்தில் ஐசிசி அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The International Cricket Council (ICC) suspends six umpires, who were allegedly involved in fixing matches that was exposed by a sting operation carried out by an Indian news channel recently.
கருத்தை எழுதுங்கள்