Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐசிசி டுவென்டி20 போட்டிகளுக்கான கனவு அணி: இந்திய வீரர்கள் கோஹ்லி-ரெய்னாவுக்கு வாய்ப்பு

Posted by:
Published: Wednesday, October 10, 2012, 9:58 [IST]
 

ஐசிசி டுவென்டி20 போட்டிகளுக்கான கனவு அணி: இந்திய வீரர்கள் கோஹ்லி-ரெய்னாவுக்கு வாய்ப்பு
 

கொழும்பு: ஐசிசி டுவென்டி20 போட்டிகளுக்கான கனவு அணியில் இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இலங்கை வீரர் ஜெயவர்த்தனே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களை கொண்ட ஒரு கனவு அணியை, ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) தேர்வு செய்வது வழக்கம். இதில் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனி அணி தேர்வு செய்யப்படும்.

இந்த ஆண்டிற்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கனவு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டுவென்டி20 போட்டிகளுக்கான ஐசிசியின் கனவு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணியை வழிநடத்திய மகிளா ஜெயவர்த்தனே, அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததால், ஜெயவர்த்தனே தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சேர்ந்த ஜெயவர்த்தனே மட்டுமின்றி, ஆல் ரவுண்டர் அஜந்தா மென்டிஸ், வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்களான விராத் கோஹ்லியும், சுரேஷ் ரெய்னாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டுவென்டி20 உலக கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் துவக்க வீரராக உள்ளார். மேலும் அந்நாட்டு ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன், மிச்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் இருந்து சயீது அஜ்மல், இங்கிலாந்து அணியை சேர்ந்த லூக் ரைட் ஆகியோர் அணியி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் யாரும் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
International Cricket Council (ICC) has named the team of the tournament which includes India's Virat Kohli and Suresh Raina according to an ICC release. ICC has named Sri Lanka's Mahela Jayawardene as the captain of the world T20 team.
கருத்தை எழுதுங்கள்