Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐபிஎல் தொடரால் அச்சுறுத்தல்: கார்ல் ஹூப்பர்

Posted by:
Published: Thursday, October 11, 2012, 18:45 [IST]
 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐபிஎல் தொடரால் அச்சுறுத்தல்: கார்ல் ஹூப்பர்
 

மெல்போர்ன்: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கார்ல் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் டுவென்டி20 தொடரான ஐபிஎல் தொடர் பிரபலமானது. இதில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து போட்டிகளில் களமிறங்குவதால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான புகழை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியாவில் உள்ள இளம்வீரர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கார்ல் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இன்றைய கிரிக்கெட் உலகை அதிகமாக அச்சுறுத்தும் தொடராக இருப்பது ஐபிஎல். இதனால் சிறந்த வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க பார்வையாளர்கள் விரும்புகின்றனர். ஆனால் என்னை பொறுத்த வரை ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது கிறிஸ் கெய்ல் போன்ற முக்கிய வீரர்களை மறந்துவிட்டு பார்ப்பேன்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களான கிறிஸ் கெய்ல், சுனில் நரேன், பிராவோ ஆகியோர் ஐபிஎல் தொடருக்கான சொந்த நாட்டு அணியில் விளையாடுவதை விட்டுவிட்டனர். இவர்கள் ஐபிஎல் தொடர்களின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, அதை தொடராமல் சொந்த நாட்டு அணிக்காக விளையாட வேண்டும்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒப்பந்தத்தில் சுனில் நரேன் இருந்தால், அவர் நாட்டு அணிக்காக தான் விளையாட வேண்டும். சர்வதேச அளவில் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கும் போது, அதன் முக்கிய வீரர்கள் நாட்டு அணிக்காக ஆட வேண்டும்.

நான் ஒரு பழமை விரும்பி. என்னை பொறுத்த வரை ஒரு கிரிக்கெட் வீரர் டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக ஆடும் திறமையை கொண்டிருந்தால், அவரால் எந்த மாதிரியான போட்டிகளிலும் விளையாட முடியும் என்றார்.

English summary
Former West Indies skipper Carl Hooper felt Indian Premier League was posing a threat to international cricket, and urged the Boards to issue a central contract for players, in order to ensure that they play for the country than getting lured by cash-rich league, IPL.
கருத்தை எழுதுங்கள்