Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக அனில் கும்ப்ளே நியமனம்

Posted by:
Published: Friday, October 12, 2012, 16:42 [IST]
 

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக அனில் கும்ப்ளே நியமனம்
 

கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் இலங்கையில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே, ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது இப்பதவில் 2 ஆண்கள் நீடிப்பார்.

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கிரிக்கெட் ஆடுகளத்தில் ஆடி பழக்கம் கொண்டவர் என்பதை காட்டிலும், கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்து அனுபவம் கொண்டவர் அனில் கும்ப்ளே. எனவே ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட அவர் தகுதியானவர்.

முன்னாள் தலைவரான கிளைவ் லாய்ட் விட்டு சென்ற பணிகளை, அனில் கும்ப்ளே பொறுப்பாக செய்து முடிப்பார் என்று நம்புகிறேன். அதேபோல கமிட்டியின் உறுப்பினராக இருந்த இயான் பிஷப்பிற்கு பதிலாக சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர் ஆன்ரூ ஸ்டிராஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் கமிட்டிக்கு தலைவராக இருந்த கிளைவ் லாய்டின் பணிகள் பாராட்டத்தக்கவை. அதேபோல உறுப்பினாராக செயல்பட்ட இயான் பிஷப்பிற்கும் பாராட்டுகிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மார்க் டெய்லர் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் வீரர்களின் பிரதிநிதியாகவும், டேவிட் கென்டிஸ் புள்ளியியலாளராகவும் தொடர்ந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவியை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வகித்துள்ளார். அவருக்கு பிறகு இந்த பதவியை வகிக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே பெற்றுள்ளார்.

English summary
Former India cricketer Anil Kumble has been appointed as the chairman of the International Cricket Council's Cricket Committee by the governing body as he replaced West Indies' legend Clive Lloyd.
கருத்தை எழுதுங்கள்