Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடர்: லீக் போட்டிகள் நாளை முதல் துவக்கம்

Posted by:
Updated: Tuesday, May 7, 2013, 16:39 [IST]
 

கேப்டவுன்: பல நாடுகளை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளது.

நாளை முதல் போட்டி

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தொடரின் லீக் சுற்று நாளை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

பந்தயத்தில் குதிக்கும் 10 அணிகள்

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மொத்தம் 10 உள்ளூர் அணிகள் களமிறங்க உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்க்ரோச்சர், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ், இங்கிலாந்தை சேர்ந்த லயன்ஸ் ஆகிய 8 அணிகள் தொடரின் லீக் போட்டிகளில் விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

4 ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 4 அணிகள் இந்தியாவிலிருந்து பங்கேற்கின்றன.

தகுதி சுற்று மூலம் 2 அணிகள்

மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்யும் தகுதி சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து, இங்கிலாந்தை சேர்ந்த யார்க்ஷயர் ஆகிய அணிகள் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

2 பிரிவுகளாக 10 அணிகளும் மோதல்

லீக் சுற்றில் பங்கேற்க உள்ள 10 அணிகள், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், டைட்டன்ஸ், பெர்த், ஆக்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லயன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், யார்க்ஷயர் ஆகிய அணிகள் உள்ளன.

28ம் தேதி இறுதிப் போட்டி

லீக் சுற்றின் முடிவில் அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தொடரின் இறுதிப் போட்டி வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.

இன்றைய போட்டிகள்:

நாளை 5 மணிக்கு நடைபெற உள்ள முதல் லீக் போட்டியில் டைட்டன்ஸ், பெர்த் அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள 2வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோத உள்ளன.

Story first published:  Friday, October 12, 2012, 12:00 [IST]
English summary
With two teams qualifying for the Main draw of Champions League T20, the tournament draws more attention as Auckland Aces and Yorkshire join the IPL teams Delhi Daredevils, champions Kolkata Knight Riders, Chennai Super Kings, Mumbai Indians, South Africa's Titans and Highveld Lions, Australia's Sydney Sixers and Perth Scorchers.
கருத்தை எழுதுங்கள்