Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆல் ரவுண்டர் பிராவோ காயம்: சென்னை சூப்பர் கிங்ஸில் இலங்கை வீரர் குலசேகரா சேர்ப்பு!

Posted by:
Published: Friday, October 12, 2012, 15:39 [IST]
 

ஆல் ரவுண்டர் பிராவோ காயம்: சென்னை சூப்பர் கிங்ஸில் இலங்கை வீரர் குலசேகரா சேர்ப்பு!
 

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிராவோ காயமடைந்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான குலசேகரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 4 உள்ளூர் அணிகள் பங்கேற்க உள்ளன.

தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை முதல் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான அணிகளின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான வெய்ன் பிராவோ காயமடைந்துள்ளார். அதேபோல இளம்வீரர் எஸ்.அனிரூத்திற்கு வலது கழுத்து பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு 6 வாரம் ஓய்வு தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களை மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் ஆல் ரவுண்டரான பிராவோவிற்கு பதிலாக, இலங்கை ஆல் ரவுண்டர் குலசேகரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இளம் அனிரூத்திற்கு பதிலாக, ஷாதப் ஜக்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க உள்ள யுவ நெக்ஸ்ட் அணியிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சாம்பியன்ஸ் லீக் தொழிற்நுட்ப குழு அனுமதி அளித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

English summary
Champions League T20 Technical Committee has approved a few changes in the Chenani Super Kings, as Nuwan Kulasekara will be replacing Dwayne Bravo in the tournament.
கருத்தை எழுதுங்கள்