Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெக்கானுக்கு நேரம் சரியில்லை.. வங்கி உத்தரவாதம் அளிக்க தவறியதால் ஐபிஎல்லில் இருந்து நீக்கம்

Posted by:
Updated: Friday, October 12, 2012, 17:50 [IST]
 

டெக்கானுக்கு நேரம் சரியில்லை.. வங்கி உத்தரவாதம் அளிக்க தவறியதால் ஐபிஎல்லில் இருந்து நீக்கம்
 

டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் விலைக்கு வாங்க உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி வங்கி உத்தரவாத தொகையை அளிக்க அளிக்கப்பட்டிருந்த காலகெடு இன்று முடிவடைந்ததால், ஐபிஎல் குழுவில் இருந்து அந்த அணியை நீக்கி, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்த உள்ளூர் கிரிக்கெட் அணி டெக்கான் சார்ஜர்ஸ். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. மேலும் அணிக்காக ஆடிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அணி நிர்வாகம் திணறியது.

வீரர்களுக்கு சம்பளம் அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) காலகெடுவை நீடித்தது. ஆனால் கடும் நிதி நெருக்கடியில் தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்தால், வீரர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க முடியவில்லை. மேலும் அணியை விற்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனால் சென்னையி்ல் கூடிய ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் விதிமுறைகளை மீறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் குழுவில் இருந்து நீக்காமல் இருக்க, பிசிசிஐக்கு ரூ.100 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்கு இன்று மாலை 5 மணிக்குள் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்திற்கு காலகெடு அளித்தது. மேலும் டெக்கான் சார்ஜர்ஸ் வங்கி உத்தரவாதம் அளிக்க தவறும் பட்சத்தில், இந்த பிரச்சனையில் பிசிசிஐயின் முடிவே இறுதியானது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நிர்வாகத்திற்கு உதவும் வகையில், மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான கம்லா லேண்ட்மார்க் என்ற நிறுவனம் ரூ.100 கோடி நிதி அளிக்க முன்வந்தது. மேலும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ரூ.1000 கோடி கொடுத்து வாங்க கம்லா லேண்ட்மார்க் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது.

இது குறித்த அறிவிப்பு கடிதத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்பனை செய்வது குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் விற்பனை, மாற்றம் ஆகிய குறித்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. எனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை, கம்லா லேண்ட்மார்க் ரியல் எஸ்டேட் ஹோல்டிங் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் கொண்டுள்ளது என்று தெவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு நிதி உத்தரவாதம் அளிக்க எந்த வங்கியும் முன்வரவில்லை. இதனால் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, பிசிசிஐ எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரியவந்தது. இந்த நிலையில் வங்கி உத்தரவாதம் அளிக்க தவறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, ஐபிஎல் குழுவில் இருந்து நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Story first published:  Friday, October 12, 2012, 12:25 [IST]
English summary
Cricket board BCCI has terminated the franchise of IPL team Deccan Chargers after the owners, Deccan Chronicle Holdings Ltd, failed to pay the Rs. 100 crore bank guarantee to the BCCI. The franchise had time till 5pm till today to produce the guarantee.
கருத்தை எழுதுங்கள்