Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: ஷேவாக் ஓ.கே... கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆடுவார்

Posted by:
Published: Friday, October 12, 2012, 8:47 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்: ஷேவாக் ஓ.கே... கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆடுவார்
 

ஜோஹன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லிடேர்டெவில்ஸ் அணியின் வீரர் வீரேந்திர ஷேவாக் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்குகிறது. சனிக்கிழமை, அதாவது நாளை டெல்லி டெர்டெவில்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முதல் போட்டியல் சந்திக்கின்றன.

செஞ்சுரியனில் நடைபெறும் இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸின் வீரேந்திர ஷேவாக் ஆடுவாரா என்பது சந்தேகமாக இருந்தது. காரணம், அவர் உடல்தகுதியில் இல்லை என்று வெளியான செய்திகளால்.

இந்த நிலையில் நேற்று அவர் பூரண உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளைய முதல் போட்டியில் ஷேவாக் கலந்து கொண்டு ஆடுகிறார்.

சமீபத்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்தார் ஷேவாக் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Senior opener Virender Sehwag will play in Delhi Daredevils' opening Champions League Twenty20 encounter against IPL champions Kolkata Knight Riders at the Centurion on Saturday after he cleared the fitness test. Sehwag had suffered a ligament strain on his left ankle during India's final Super Eights game against South Africa in Colombo recently.
கருத்தை எழுதுங்கள்