Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தமிழகத்திற்கு முதல் ரஞ்சி கோப்பையை பெற்று தந்த பாலு அழகணன் மரணம்

Posted by:
Published: Friday, October 12, 2012, 8:09 [IST]
 

 

சென்னை: கடந்த 1954-55ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு, தமிழகத்திற்கு முதல் ரஞ்சி கோப்பையைப் பெற்று தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பாலு அழகணன் நேற்று சென்னையில் மரணமடைந்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் கிரிக்கெட் போட்டி பிரபலமடைய முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்தியா, ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த போது, தமிழகத்தை சேர்ந்த ஜி.பார்த்தசாரதி, எம்.ஜே.கோபாலன், சி.ராமசாமி, சி.ஆர்.ரங்காசாரி ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருந்துள்ளனர். அதேபோல சுதந்திரத்திற்குப் பின்னரும் பலர் கிரிக்கெட் உயர்வுக்குப் பாடுபட்டுள்ளனர்.

அந்த வரிசையில் பாலு அழகணனுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகத்திற்கு முதல் ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுத்தவர் இவர் அழகணன்.

சாந்தமாக பேசும் தன்மை கொண்ட அழகணன், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தவர். கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதியுடன் 87 வயதை கடந்த அவர், இளம்வயதில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தவர். மேலும் அணியை சிறப்பாக வழிநடத்தி செல்லும் திறமையும் கொண்டிருந்தார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அழகணன், வர்ணனையாளராக பணியாற்றினார். தேசிய அளவிலான போட்டிகளுக்கு, ரேடியோவில் வர்ணனையாளராக செயல்பட்ட அழகணனின் குரலை கேட்ட பலரும் போட்டியை நேரில் கண்ட திருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 1975-76ம் ஆண்டுகளில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் அழகணனும் ஒருவராக இருந்தார்.

English summary
This tradition was magnified in the aftermath of Independence, which in 1954-55, witnessed the first ever triumph in Ranji Trophy, under the leadership of R.B.Alaganan, endearingly referred to as "Balu" Alaganan. 87 year old Balu Alaganan has passed away in Chennai
கருத்தை எழுதுங்கள்