Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய கேப்டன் பதவியை வகிக்க விராத் கோஹ்லி அவசரப்பட கூடாது: வாசிம் அக்ரம்

Posted by:
Published: Friday, October 12, 2012, 14:23 [IST]
 

இந்திய கேப்டன் பதவியை வகிக்க விராத் கோஹ்லி அவசரப்பட கூடாது: வாசிம் அக்ரம்
 

டெல்லி: இந்திய அணியின் கேப்டன் பதவியை வகிக்க இளம்வீரர் விராத் கோஹ்லி தற்போதைக்கு அவசரப்பட கூடாது. சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதோடு இந்திய அணி 3வது முறையாக டுவென்டி20 உலக கோப்பை தொடரில், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் டோணி கேப்டன் பதவியில் தொடர கூடாது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு 3 கேப்டன்கள் நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் பரவியது. இதில் தற்போது இந்திய அணியில் சிறப்பாக ஆடி வரும் விராத் கோஹ்லி, இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது.

ஆனால் தற்போதைக்கு விராத் கோஹ்லி, இந்திய அணியின் கேப்டனாக பதவி வகிக்க அவசரப்பட கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் விராத் கோஹ்லி, இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரை அவர் கேப்டனாக பதவி வகிக்க சற்று காத்திருப்பது நல்லது. கோஹ்லி தற்போது சிறந்த பார்மில் உள்ளார். கடந்த 18 மாதங்களாக அவர் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

எனவே அவர் தொடர்ந்து போட்டிகளில் ரசித்து ஆட அனுமதிக்க வேண்டும். இப்போதே அவருக்கு கேப்டன் பதவி போன்ற பொறுப்புகளை அளித்து அவரது ஆட்டத்தை கெடுத்துவிட கூடாது. கேப்டனாக நியமிக்கப்பட்டால், அணி தேர்வு போன்ற முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

டுவென்டி20 உலக கோப்பை தொடர்களில், 3வது முறையாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் டோணி இந்திய அணியின் கேப்டனாக தொடர தகுதியானவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

டோணி தனது பொறுப்புகளை குறித்து யோசித்து, ஒரு சிறந்த கேப்டனாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு கேப்டனாக தன்னை மாற்ற தேவையான மாற்றங்களை கண்டறிய, அவரால் மட்டுமே முடியும். 3 வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவது அவருக்கு கூடுதல் சுமையாக இருக்கலாம்.

எனவே தனக்கு கடினமாக தோன்றும் ஏதாவது ஒரு வகை கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக இருப்பதை தவிர்க்கலாம். இதன்மூலம் அவரால் போட்டிகளில் ரசித்து ஆட முடியும். ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளை பொறுத்தவரை, அணியின் வெற்றியை உறுதி செய்பவர்களில், டோணி ஒரு சிறந்த வீரராக உள்ளார் என்பதை மறுக்க முடியாது என்றார்.

English summary
Former Pakistan skipper Wasim Akram feels India's latest sensation Virat Kohli should not be rushed into captaincy after the Delhi lad was being considered for leading Team India in the limited overs format of the game.
கருத்தை எழுதுங்கள்