Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 போட்டிகளில் உலகிலேயே சிறந்த வீரர் கிறிஸ் கெய்ல்: ஷேன் வாட்சன் பாராட்டு

Posted by:
Published: Saturday, October 13, 2012, 17:01 [IST]
 

டுவென்டி20 போட்டிகளில் உலகிலேயே சிறந்த வீரர் கிறிஸ் கெய்ல்: ஷேன் வாட்சன் பாராட்டு
 

சென்சூரியன்: டுவென்டி20 போட்டிகளில் உலகிலேயே சிறந்த வீரர் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் என்று டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன். சிறப்பான பேட்டிங் மூலம் 249 ரன்களும், பந்துவீச்சில் 11 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனால் ஷேன் வாட்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய அணி, டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்குள் நுழையவில்லை.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லை, உலகிலேயே சிறந்த டுவென்டி20 வீரர் என்று ஷேன் வாட்சன் புகழ்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இழந்தாலும், தொடரின் முடிவில் என்னை சிறந்த வீரர் என்று தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் என்னை பொறுத்த டுவென்டி20 போட்டிகளில் உலகிலேயே சிறந்த வீரர் கிறிஸ் கெய்ல் தான். அவரை போன்ற ஒரு அதிரடி வீரரை பார்க்க முடியாது.

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் மட்டுமின்றி, எல்லா போட்டிகளிலும் கிறிஸ் கெய்லின் ஆட்டம் சிறப்பானது. உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனான அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம்.

ஐபிஎல் தொடரில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறாதது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது நல்லது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்ற போது, கிறிஸ் கெய்லுக்கு எதிராக பல போட்டிகளில் ஆடியுள்ளேன். எனக்கு 19 வயது இருக்கும் போது, அவர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நான் ஆடி உள்ளேன். உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான போட்டிகளில் ஆடுவது மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகும் என்றார்.

English summary
Despite being rated No.1 in the shortest format of the game, Australia's Shane Watson has said that the Jamaican storm, Chris Gayle is the best T20 player in the world.
கருத்தை எழுதுங்கள்