Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணியின் கேப்டன் பதவி எப்போது அளித்தாலும் நான் ஏற்க தயார்: விராத் கோஹ்லி

Posted by:
Published: Saturday, October 13, 2012, 10:08 [IST]
 

இந்திய அணியின் கேப்டன் பதவி எப்போது அளித்தாலும் நான் ஏற்க தயார்: விராத் கோஹ்லி
 

டெல்லி: இந்திய அணியின் கேப்டன் பதவி தனக்கு எப்போது அளித்தாலும் ஏற்க தயாராக இருப்பதாக, இளம் வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையை இந்திய அணி வென்றது. ஆனால் அதன்பிறகு நடப்பு சாம்பியன் அந்தஸ்தை காப்பாற்ற இந்திய அணி போராடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் இளம்வீரராக ஜொலிக்கும் விராத் கோஹ்லி, அணியின் வெற்றிகளுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 18 மாதங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் விராத் கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார். விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் சமீபகால தோல்விகளால், கேப்டன் டோணி மீது அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்க தான் தயாராக இருப்பதாக, விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,

இந்திய அணியின் கேப்டனாக என்னை நியமிக்க போவதாக வெளியான செய்தியை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அதை குறித்து நான் தற்போதைக்கு யோசிக்கவில்லை. கேப்டன் பதவி எப்போது அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க தயாராக உள்ளேன். ஆனால் தற்போதைக்கு எனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு போட்டியிலும் சாந்தமாகவும், பொறுமையாகவும் இருக்க முயன்று வருகிறேன். இதற்காக போட்டி துவங்கும் முன் நல்ல பஞ்சாபி இசையை கேட்கிறேன். இதன்மூலம் எனது பழக்க வழக்கத்தில் பெரும் மாற்றத்தை காண முடிகிறது.

இசையை கேட்பது, சகநண்பர்களுடன் பேசுவது ஆகியவை மூலம் எனது மனதை அமைதிப்படுத்தி கொள்கிறேன். ஆடுகளத்தை விட்டு வெளியே வந்துவிட்டால், பேட்டிங், பந்துவீச்சு ஆகியவை குறித்து நான் யோசிப்பதில்லை என்றார்.

English summary
Indian batsman Virat Kohli said that, He is read to take the responsibility of leading Indian team. But i am not thinking about it now, rather i concentrate in the game, he said.
கருத்தை எழுதுங்கள்