Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மோசமாக ஆடிவரும் ஷாகித் அப்ரிதிக்கு இடைவேளை தேவை: மொய்ன் கான்

Posted by:
Published: Saturday, October 13, 2012, 15:23 [IST]
 

மோசமாக ஆடிவரும் ஷாகித் அப்ரிதிக்கு இடைவேளை தேவை: மொய்ன் கான்
 

கராச்சி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோசமாக ஆடிவரும் ஷாகித் அப்ரிதி, கொஞ்சம் இடைவேளை எடுத்து கொண்டு, தனது பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மொய்ன் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதி. ஒரு காலத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிரணியினரை மிரட்டிய இவர் தற்போது பார்மின்றி தவிக்கிறார். சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த டுவென்டி20 உலக கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அதிலும் பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, உலக கோப்பை தொடரில் மோசமாக ஆடினார். இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து அப்ரிதி ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் ஷாகித் அப்ரிதி தற்போதைக்கு இடைவேளை எடுத்து கொண்டு தனது பார்மை மீட்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொய்ன் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஷாகித் அப்ரிதி தற்போது ஓய்வு பெற தேவையில்லை. பாகிஸ்தான் அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் கூட அவரால் விளையாட முடியும். என்னை பொறுத்த வரை அப்ரிதி, தற்போதைக்கு சற்று இடைவேளை எடுத்து கொண்டு, தனது பார்மை மீட்க வேண்டும்.

இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அப்ரிதி தனது குடும்பத்துடன் சிலநாட்கள் செலவிட்டு புத்துணர்ச்சி பெற வேண்டும். அப்ரிதியின் தற்போதைய ஆட்டத்தை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. தன்னம்பிக்கை இல்லாமல் அவர் போட்டிகளில் பங்கேற்பதால், அவரால் சிறப்பாக ஆட முடிவதில்லை. எனவே இடைவேளை எடுத்து கொண்டு அவர் இழந்த தன்னம்பிக்கை மற்றும் பார்மை மீட்க வேண்டும்.

உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு மூத்த வீரர் அப்துல் ரஸாக் சேர்க்கப்படாமல் இருந்தது அநீதியானது. இதனால் ரஸாக் கடும் மனவருத்தம் அடைந்திருப்பார். பாகிஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் களமிறங்கி உள்ள ரஸாக் போன்ற மூத்த வீரர்களுக்கு, முக்கிய போட்டிகளில் ஓய்வு அளித்து அமர வைப்பது முறையல்ல. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டேவ்வாட்மோர் மூலம் கடந்த 6 மாதங்களில் அணி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.

English summary
Former Pakistan captain Moin Khan has advised experienced all-rounder Shahid Afridi, who is struggling for form, to take a break from the game.
கருத்தை எழுதுங்கள்