Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெக்கானுக்குப் பதில் புதிய அணியைத் தேர்வு செய்ய டெண்டர் விட்டது பிசிசிஐ

Posted by:
Published: Sunday, October 14, 2012, 12:39 [IST]
 

டெக்கானுக்குப் பதில் புதிய அணியைத் தேர்வு செய்ய டெண்டர் விட்டது பிசிசிஐ
 

டெல்லி: டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கி விட்டதைத் தொடர்ந்து அதற்குப் பதில் புதிய அணியைத் தேர்ந்தெடுக்கும் பூர்வாக நடவடிக்கைகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. புதிய அணிக்கான டெண்டரை அது அறிவித்துள்ளது.

நிதிப் பிரச்சினையில் சிக்கித் தடுமாறி ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் குழுவிலிருந்து நீக்கி விட்டது பிசிசிஐ. இதையடுத்து புதிய அணியை தேர்வு செய்ய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 12 நகரங்கள் டெண்டருக்கு அழைக்கப்பட்டுள்ளன. அவை அகமதாபாத், கட்டாக், தர்மசலா, இந்தூர், ஹைதராபாத், கான்பூர், கொச்சி, நாக்பூர், நொய்டா, ராஜ்கோட், ராஞ்சி மற்றும் விசாகப்பட்டனம்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் அக்டோபர் 25ம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் தங்களது டெண்டர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

English summary
After terminating cash-strapped Deccan Chargers from the Indian Premier League, the BCCI on Sunday began the process of finding a new team by floating tender notices for a fresh franchise. "Under this invitation to tender, the winning bidder will be granted the right to own and operate a new team which will compete in the IPL in each year from and including 2013 onwards and will have the opportunity (if applicable and subject to qualification) to compete in each and any CLT20 which is staged from 2013 onwards." the BCCI said in an advertisement published in leading newspapers. The bids have been invited in respect of 12 cities -- Ahmedabad, Cuttack, Dharamsala, Indore, Hyderabad, Kanpur, Kochi, Nagpur, Noida, Rajkot, Ranchi and Vizag.
கருத்தை எழுதுங்கள்