Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாபியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

Posted by:
Published: Sunday, October 14, 2012, 14:01 [IST]
 

சாபியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
 

செஞ்சூரியன்: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. உன்முகுத்சந்த் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார் ரோஸ் டெய்லர் 24 பந்தில் 36 ரன்களை எடுத்தார். சுனில் நரீன் 3 விக்கெட்டும், எல்.பாலாஜி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி, டெல்லி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நிலைகுலைந்தது. மொத்தம் 7 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களையே அந்த அணியால் எடுக்க முடிந்தது. கொல்கத்தாவின் மனோஜ் திவாரி அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தார்.

இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே கூறுகையில், சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தொடக்கமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு ஏற்றவகையில் எங்களது ஆக்ரோஷம் இருந்தது. ஒவ்வொரு வரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர் என்றார்.

தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் காம்பீர் கூறும்போது, சில நேரங்களில் போட்டி எப்படி வேண்டுமானாலும் அமைந்துவிடும். இர்பான்பதான், மார்னே மார்கல் உள்ள டெல்லி வீரர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினர் என்றார்.

டெல்லி அணி 2-வது ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் அணியை 19-ந்தேதி எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் ஆக்லாந்து ஆசஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது.

English summary
Delhi Daredevils produced a superb bowling show as they crushed Kolkata Knight Riders by 52 runs in their opening Champions League Twenty20 match on Saturday.
கருத்தை எழுதுங்கள்